2 ஆவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் ஏன் விளையாடவில்லை? உண்மை காரணத்தை வெளியிட்ட – பி.சி.சி.ஐ

Siraj
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறாத வேளையில் கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக வெளியேறினர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி எவ்வாறு இந்த சூழலை சமாளிக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதேபோன்று முதல் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்ஜும் இந்த போட்டியில் விளையாடவில்லை.

கடந்த போட்டியில் வெறும் 11 ஓவர்களை மட்டுமே வீசியிருந்த அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இப்படி முகமது சிராஜை அணியிலிருந்து வெளியேற்றுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவலை தற்போது பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் : முகமது சிராஜ் இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு எடுப்பதற்கு காரணம் யாதெனில் : இந்த டெஸ்ட் தொடரானது நீண்ட தொடர் என்பதனாலும் அவர் ஏற்கனவே தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டியில் விளையாடி வந்ததாலும் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தோல்வியை கொடுத்த இங்கிலாந்து வீரரின்.. 3 ஸ்டம்ப்பையும் தெறிக்க விட்ட பும்ரா.. தேநீரில் முன்னிலை யார்?

நிச்சயம் ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என ஒரு முழுமையான தகவலை வெளியிட்டு தற்போது சிராஜ் ஓய்வு காரணமாகவே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement