தோல்வியை கொடுத்த இங்கிலாந்து வீரரின்.. 3 ஸ்டம்ப்பையும் தெறிக்க விட்ட பும்ரா.. தேநீரில் முன்னிலை யார்?

Ollie Pope Bumrah
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. பிப்ரவரி இரண்டாம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து விளையாடிய இந்தியா கடுமையாக போராடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களில் யாருமே 35 ரன்கள் கூட தாண்டாமல் பெரிய பின்னடைவை கொடுத்தனர். ஆனால் இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்ப முதலே இங்கிலாந்துக்கு எதிர்ப்புறம் சிம்ம சொப்பனமாக நின்று அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

மிரட்டிய பும்ரா:
அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்றையும் அவர் படைத்தார் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பசீர் மற்றும் ரீகன் அகமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் அதிரடியாக விளையாட முயற்சித்த பென் டுக்கெட் 21 (17) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த ஓலி போப் நிதானமாக விளையாடினார். அவருடன் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி அரை சதம் விளாசி 76 (78) ரன்களில் அக்சர் படேல் சுழலில் ஸ்ரேயாஸ் ஐயரின் அபார கேட்ச்சால் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்டை 5 ரன்களில் பும்ரா அவுட்டாக்கி அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த ஓலி போப்பை 23 ரன்களில் துல்லியமான யார்க்கர் பந்தால் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார். குறிப்பாக கடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த அவரை இம்முறை அடிக்கவே முடியாத அட்டகாசமான பந்தை வீசி போல்டாக்கிய பும்ரா 3 ஸ்டம்புகளையும் பறக்க விட்டது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

இதையும் படிங்க: அஸ்வின் மீது அம்பயரிடம் புகார் செய்த ஆண்டர்சன்.. வாக்குவாதத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு

அதனால் இரண்டாவது நாள் தேநீர் இடைவெளியில் இங்கிலாந்து 155/4 ரன்களுடன் சற்று தடுமாற்றமாகவே பேட்டிங் செய்து வருகிறது. இன்னும் அந்த அணி இந்தியாவை விட 241 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் களத்தில் ஜானி பேர்ஸ்டோ 24*, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5* ரன்களுடன் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement