சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்திலும் தனது திறனை நிரூபித்த பாஸ்ட் பவுலர் – எங்கயோ போகப்போறாரு

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது. முன்னதாக பெங்களூருவில் கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 252 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தனி ஒருவனாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 92 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட போதிலும் இந்தியாவைக் காப்பாற்றினார்.

- Advertisement -

இந்தியா வைட்வாஷ் வெற்றி:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இத்தொடரின் முதல் போட்டியை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அஞ்சலோ மெத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 143 முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முதல் இன்னிங்சை போலவே அதிரடியாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் குவித்தனர்.

இறுதியில் 447 என்ற இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி 0/1 என மீண்டும் சொதப்பலான தொடக்கத்தை பெற்றது. அடுத்து வந்த அனைத்து இலங்கை வீரர்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வரிசையாக அவுட்டாகி வந்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த கேப்டன் கருணரத்னே சதமடித்து 107 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடினார். இருப்பினும் இதர இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் வெறும் 208 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி பரிதாப தோல்வி அடைந்தது. இந்த இவற்றின் வாயிலாக 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0 என கைப்பற்றிய இந்தியா சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த அசத்தியது.

Sl

ஆல் ஏரியா கில்லி பும்ரா:
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளுக்கு பின்புதான் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவாலை அளிக்கும். ஆனால் இந்த போட்டி நடந்த பெங்களூரு பிட்ச் முதல் நாளன்றே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்தது. அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை சுமாரான சுழல் பந்துவீச்சாளர்களை வைத்திருந்த இலங்கை வெறும் 252 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

அப்படிப்பட்ட சுழலுக்கு சொந்த மண்ணில் இந்தியாவாலேயே தாக்கு பிடிக்க முடியவில்லையே? அப்படியானால் இந்தியாவிடம் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலங்கையும் கண்டிப்பாக 100 ரன்களைக் கூட தொடாது என பலரும் எதிர்பார்த்தார்கள்.

Bumrah 1

மேலும் மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் தொல்லை கொடுத்த ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தான் இலங்கைக்கு மீண்டும் சவாலை கொடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் முதல் நாளே தாறுமாறாக சுழன்ற பிட்சில் இளஞ்சிவப்பு நிற பந்தை கையில் எடுத்த ஒரு வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தனது அபார திறமையால் இலங்கை வீரர்களை திணறடித்து 5 விக்கெட்டுகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இத்தனைக்கும் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களுக்கும் மேல் எடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ரா சொந்த மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் ஹால் பதிவு செய்தது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் காலடி வைத்த அவர் இதுவரை சவால் மிகுந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய வெளிநாடுகளில் ஏற்கனவே 5 விக்கெட் ஹால் பதிவு செய்து தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என நிரூபித்தவர். அப்படிப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியாவில் ஒரு 5 விக்கெட் ஹால் எடுத்துள்ள அவர் மீண்டும் தன்னை ஒரு ஆல் ஏரியா கிங் என நிரூபணம் செய்துள்ளார்.

Bumrah

உலகத்தரம் வாய்ந்த பும்ரா:
ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆசியாவை சேர்ந்த அதிலும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர் 5 விக்கெட் ஹால் எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அப்படிப்பட்ட சவால் மிகுந்த நாடுகளில் ஏற்கனவே 5 விக்கெட்களை எடுத்துள்ள அவர் தற்போது சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கக்கூடிய இந்திய மண்ணிலும் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார்.

- Advertisement -

பொதுவாக சொந்த மண்ணாக இருந்தாலும் சரி வெளிநாட்டு மண்ணாக இருந்தாலும் சரி உலகின் எந்த ஒரு இடமாக இருந்தாலும் சரி அதன் கால சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் தனது திறமையால் மிகச் சிறப்பாக செயல்படுபவரையே உலகத்தரம் வாய்ந்த வீரர் என வல்லுநர்கள் அழைப்பார்கள். அந்த வகையில் உலகின் எந்த ஒரு இடத்திலும் தனது அபார திறமையால் மேஜிக் நிகழ்ச்சி விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக ஒரு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இதையும் படிங்க : தற்போதுள்ள இந்திய அணியில் இவரை தான் எனக்கு மிகவும் பிடிச்சுருக்கு – கபில் தேவ் பாராட்டும் அவர் யார் தெரியுமா?

தற்போது வெறும் 28 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் இதுபோல வருங்காலங்களில் உலகின் எந்த ஒரு இடத்திலும் நடைபெறும் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பெருமை தேடித் தருவார் என உறுதியாக நம்பலாம்.

Advertisement