கேப்டன்னா இப்படி தான் இருக்கனும், ரோஹித்தை மனதார பாராட்டிய துணை கேப்டன் பும்ரா – எதற்கு தெரியுமா?

bumrah
- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் முழுநேர கேப்டனாக நட்சத்திர அனுபவ வீரர் ரோகித் சர்மா செயல்படத் துவங்கி உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

INDvsSL

- Advertisement -

அப்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த முதல் தொடரிலேயே 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து அமர்களப்படுத்தினார். அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டனாக இருந்த விராட் கோலி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா:
அதற்கு அடுத்த மாதமே வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் துணை கேப்டனாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

Bumrah

குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களாக நியமிக்கப்படுவது அரிதினும் அரிதாகும். ஆனால் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக பந்து வீசி உலகத்தரம் வாய்ந்த பவுலராக உருவெடுத்துள்ள பும்ரா இந்தியாவின் முதல் பந்து வீச்சாளராக இருப்பதாலேயே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கேப்டன்னா இப்படி இருக்கனும்:
இந்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் துணை கேப்டனாக பணியாற்றுவதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிவிக்கப்படாத துணை கேப்டனாக பணியாற்றி உள்ளதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இதுபற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு (ரோஹித்) இடையேயான பந்தம் என்பது ஆரம்ப நாட்களில் இருந்தே நல்ல படியாக இருந்தது. மும்பை அணிக்காக நான் முதல் முறையாக விளையாடியபோது ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்தார்.

bumrah

இருப்பினும் அந்த சமயத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அதன்பின் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் எனக்கு நிறைய வாய்ப்புகளை அளித்து நிறைய தன்னம்பிக்கையையும் ஊட்டினார். வலைப்பயிற்சியில் பந்துவீசி கொண்டிருந்த என்னை பார்த்த அவர் என்னிடம் என்ன திறமை உள்ளது என்பதை கண்டறிந்தார். ஆரம்ப காலங்களில் என்மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். அதன் காரணமாக வெற்றியை தீர்மானிக்க கூடிய முக்கிய ஓவர்களை என்னிடம் வழங்கினார்”

- Advertisement -

“சில நேரங்களில் நான் சரியாக வேலை செய்கிறேன் என சமாதானப்படுத்த முயற்சிப்பேன். ஆனால் அவர்கள் உங்களை கடினமான சூழ்நிலையில் உள்ளே தள்ளி அதிலிருந்து எப்படி வருகிறீர்கள் என பார்ப்பார்கள். ஆனாலும் எங்களுக்கு இடையேயான உறவு என்பது இப்போதும் அதே போலவே உள்ளது. அதே போல் “களத்தில் எனது பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் பீல்டிங்கை செட் செய்யும் உரிமையை கேப்டனாக இருந்தாலும் அவர் அதை என்னிடமே கொடுத்துவிட்டு அதிலும் ஏதாவது மாற்றம் தேவையா என எனது விருப்பத்தை கேட்பார்”. அந்த அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்துள்ள அவருடனான எனது நட்பு இன்றுவரை தொடர்கிறது” என கூறியுள்ளார்.

Bumrah-1

பொதுவாக ஒரு கேப்டன் தான் களத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான பீல்டிங்கை செட் செய்வார். ஆனால் தன் மீது உள்ள அதீத நம்பிக்கை காரணமாக கேப்டன் என்ற கர்வம் இல்லாமல் ஒரு நண்பரைப் போல பீல்டிங் செட் செய்யும் உரிமையை தம்மிடமே ரோகித் சர்மா விட்டு விடுவார் என ஜஸ்பிரித் பும்ரா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னை ஒரு துணை கேப்டன் போல ரோகித் சர்மா நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அதன் காரணமாகவே தற்போது இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

திட்டவே மாட்டார்:
“சில நாட்களில் நான் மோசமாக பந்து வீசினாலும் கூட அதற்காக கோபப்படாமல் பொறுமையாகவும் அமைதியாகவும் அவர் எனக்கு ஆதரவு தெரிவிப்பார். அவரின் இந்த உண்மையான ஆதரவு கடினமான சூழ்நிலைகளிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியது. களத்தில் வெற்றிக்கு தேவையான எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு மிகப்பெரிய சுதந்திரத்தை அவர் எனக்கு அளித்துள்ளது எப்போதுமே உதவியாக உள்ளது” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள ஜஸ்பிரித் பும்ரா ஒரு சில வேளைகளில் மோசமாக பந்துவீசி அதனால் வெற்றி பறிபோனால் கூட கேப்டன் ரோகித் சர்மா தன்னை திட்டியது கிடையாது என பெருமையுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : முதல் போட்டியே படு மாஸான போட்டிதான் – முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?

மொத்தத்தில் கேப்டன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொள்ளும் ரோகித் சர்மா தனது கிரிக்கெட் கேரியரில் ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர மிகப் பெரிய பங்காற்றியுள்ளார் என்று பும்ரா மேலும் தெரிவித்துள்ளார். வருங்கால இந்திய கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா அதற்காக இப்போதே ரோகித் சர்மா தலைமையில் அடுத்த கேப்டனாக வளர்க்கப்படுவார் என இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement