- Advertisement -
இந்திய கிரிக்கெட்

துளியும் சுயநலமின்றி இந்திய அணிக்காக பும்ரா செய்த செயல்.. பெரிய மனுஷன்யா இவரு – விவரம் இதோ

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு வருவதாக அறிவித்தார். அதன் காரணமாக அவருக்கு அடுத்து வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவே டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தபோதே ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வந்தார். அதுமட்டும் இன்றி ரோஹித் சர்மா இல்லாத சில போட்டிகளில் பும்ராவே கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டு வந்தார்.

அணியின் நலனுக்காக சுயநலமின்றி முடிவெடுத்த பும்ரா :

இதன் காரணமாக அவரே அடுத்த இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பலராலும் பார்க்கப்பட்டார். ஆனால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இப்படி சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தனக்கு வந்த டெஸ்ட் கேப்டன்சியை ஏன் புறக்கணித்தேன்? என்பது குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை பும்ரா பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் என்னுடைய உடற்தகுதியின் அடிப்படையில் தான் டெஸ்ட் கேப்டன்சி வேண்டாம் என மறுத்தேன். ஏனெனில் என்னுடைய மருத்துவக்குழு டாக்டர்களிடம் என்னுடைய உடல்நிலை குறித்து விசாரித்த போது பணிச்சுமை காரணமாக எல்லா போட்டியிலும் என்னால் விளையாட முடியாது என்று கூறினார்கள்.

அந்த நேரத்தில்தான் நான் ஒரு புத்திசாலி தனமான முடிவை எடுத்தேன். அதாவது ஒரு தொடரில் இரண்டு அல்லது மூன்று போட்டியில் விளையாடிவிட்டு மீதமுள்ள போட்டிகளுக்கு வேறு கேப்டனை நியமிப்பது சரியாக இருக்காது. ஒரு கேப்டனாக இருப்பவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அதுதான் நமது அணிக்கும் நல்லது.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் என்னால் அனைத்து போட்டியிலும் விளையாட முடியாது எனவே என்னுடைய தனிப்பட்ட நலனை கருத்தில் கொண்டால் அது அணிக்கு நியாயமாக இருக்காது. இந்திய அணிக்கு எது நல்லதோ அதைத்தான் நான் செய்துள்ளேன். தொடர்ச்சியாக விளையாடக்கூடிய ஒருவரை டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்தேன். மேலும் என்னை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக பும்ரா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : தனது லண்டன் இல்லத்திற்கு சிராஜ், கில், பண்ட் உட்பட குறிப்பிட்ட சிலரை அழைத்த விராட் கோலி – எதற்கு இந்த மீட்டிங்?

இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன்சியை எதிர்பார்த்து சிலர் சுயநலத்துடன் செயல்பட்டு வரும் வேளையில் இந்திய அணியின் நலனுக்காக கேப்டன் பதவியை பும்ரா உதறிய இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -