தனது லண்டன் இல்லத்திற்கு சிராஜ், கில், பண்ட் உட்பட குறிப்பிட்ட சிலரை அழைத்த விராட் கோலி – எதற்கு இந்த மீட்டிங்?

Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் தற்போது 36 வயதாகும் விராட் கோலி இன்றளவும் முழு உடற்தகுதியுடன் இருப்பதால் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை எளிதாக விளையாடியிருக்கலாம்.

இந்திய வீரர்கள் சிலரை லண்டன் வீட்டிற்கு அழைத்த விராட் கோலி :

அதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9230 ரன்கள் வரை குவித்துள்ள அவர் இன்னும் 770 ரன்கள் அடித்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரராகவும் சாதனை நிகழ்த்தி இருப்பார். ஆனால் முன்கூட்டியே இப்படி அவர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கும் விராட் கோலி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தனது குடும்பத்தினருடன் அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்க இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக கிடைத்துள்ள ஒரு நாள் ஓய்வில் இந்திய அணியின் கேப்டன் கில், துணை கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் சிராஜ் ஆகியோரை விராட் கோலி அவரது வீட்டிற்கு அழைத்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி வெளியான தகவலில் : விராட் கோலி இந்திய அணியில் உள்ள சில குறிப்பிட்ட வீரர்களையும், சில குறிப்பிட்ட நிர்வாகிகளையும் தனது லண்டன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடர் மிகப்பெரிய தொடர் என்பதினால் அவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களை பகிரவும் இந்த தொடருக்கு முன்னதாக ஒரு சிறிய விருந்தினை அளிப்பதற்காகவும் விராட் கோலி இந்த அழைப்பினை விடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அடுத்த 2 மாசத்துக்கு கிரிக்கெட் பக்கமே வரமுடியாது.. சூரியகுமார் யாதவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை – விவரம் இதோ

மேலும் தற்போதைய இந்திய அணியில் பலரும் இளம் வீரர்கள் என்பதனால் இங்கிலாந்தில் உள்ள சூழலில் எவ்வாறு தகவமைத்து விளையாட வேண்டும், இந்திய அணியில் என்னென்ன பலத்தை சேர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பல்வேறு நுட்பமான விடயங்களை நேரில் கூறுவதற்காகவும் விராட் கோலி இந்த அழைப்பை விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement