இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். இந்த 2025 ஐ.பி.எல் தொடரின் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் 717 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். சராசரியாக ஒரு போட்டிக்கு 65 ரன்கள் குவித்த அவர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே அனைத்து போட்டிகளிலும் 25+ ரன்களுக்கு மேல் அடித்து உலக சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.
லண்டன் பயணிக்கவுள்ள சூரியகுமார் யாதவ் :
இந்திய அணியை பொறுத்தவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டி20 போட்டிகளை பொருத்தவரை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அடுத்த 2026 டி20 உலக கோப்பையிலும் அவரே கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் காரணமாக அடுத்து இரண்டு மாதங்களுக்கு அவர் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் யாதெனில் :
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் “ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா” என்கிற குடலிறக்க பாதிப்பால் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை கொண்ட சூரியகுமார் அதிலிருந்து மீண்டுவர சற்று சிரமப்பட்டிருந்தார். இவ்வேளையில் தற்போது அவருக்கு மீண்டும் ஹெர்னியா பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இம்முறை லண்டன் செல்லவுள்ள அவர் அங்கு தங்கி சிகிச்சையை மேற்கொண்டு அதன்பிறகு இரண்டு மாதங்கள் அங்கேயே ஓய்வெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு அவர் எவ்வித போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவின் கேப்டன்சி வேணாம்ன்னு போன் பண்ணி பிசிசிஐ’யிடம் சொன்னேன்.. இதான் 2 காரணம்.. பும்ரா பேட்டி
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் 2 குறைந்தது மாதங்களாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவும் உறுதி செய்துள்ளனர். இதன்காரணமாக அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரில் தான் சூரியகுமார் யாதவ் கம்பேக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.



