இந்தியாவின் கேப்டன்சி வேணாம்ன்னு போன் பண்ணி பிசிசிஐ’யிடம் சொன்னேன்.. இதான் 2 காரணம்.. பும்ரா பேட்டி

Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரிடமும் ஆச்சரியத்தைக் ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ரோஹித் இல்லாத போது கேப்டனாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அதனால் ரோஹித்துக்குப் பின் அவர் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று நம்பப்பட்டது. இருப்பினும் காயத்தால் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதால் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தம்மால் இந்தியாவின் கேப்டனாக செயல்பட முடியாது என்று பிசிசிஐ’க்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்து சொன்னதாக பும்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

வேணாமன்னு சொல்லிட்டேன்:

அதற்கான முதல் காரணம் தம்மால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று பும்ரா கூறியுள்ளார். எனவே ஒரு தொடருக்கு 2 கேப்டன்கள் செயல்பட்டால் அது நன்றாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் பும்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித், விராட் ஓய்வு பெறுவதற்கு முன் ஐபிஎல் தொடரின் போது 5 டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய பணிச்சுமை பற்றி பிசிசிஐயிடம் பேசினேன்”

“என்னுடைய முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்களிடம் பேசினேன். அதிலிருந்து நான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்பது தெரிய வந்தது. அதனால் பிசிசிஐயை அழைத்த நான் கேப்டனாக செயல்பட விரும்பவில்லை என்று சொன்னேன். ஏனெனில் என்னால் அனைத்து 5 போட்டிகளிலும் விளையாட முடியாது”

- Advertisement -

கேப்டன்ஷிப்பை விட கிரிக்கெடடை பிடிக்கும்:

“ஆம் பிசிசிஐ என்னை கேப்டனாக நியமிக்க விரும்பியது. ஆனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடும் போது சில போட்டிகளில் ஒருவரும் எஞ்சிய போட்டிகளில் இன்னொருவரும் கேப்டனாக செயல்படுவது நியாயமாக இருக்காது என்று நான் கருதினேன். நான் எப்போதும் தனிநபரை விட அணியை முன்னிலைப்படுத்துவதை விரும்புகிறேன்”

இதையும் படிங்க: அவங்கள அடிச்சு நொறுக்கிய சூர்யவன்சியிடம்.. லாரா, யுவ்ராஜ் மாதிரி திறமை இருக்கு.. பட்லர் பாராட்டு

“கேப்டன் என்பது ஒரு பொறுப்பு. கேப்டனாக இல்லாமல் போனாலும் ஒரு வீரராக என்னால் அணிக்கு நிறைய கொடுக்க முடியும். குறிப்பிட்ட ஃபார்மட்டில் மட்டுமே விளையாட வேண்டும் என்று விரும்பாத நான் கேப்டன்ஷிப் பொறுப்பை விட கிரிக்கெட்டை விரும்புகிறேன். கேப்டன்ஷிப் என்பது பெரியது. அதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். ஆனால் சில நேரங்களில் நீங்கள் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அணிக்கு பங்காற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதனாலேயே பிசிசிஐயை அழைத்து கேப்டன்ஷிப் வேலை வேண்டாம் என்று சொன்னேன்” எனக் கூறினார்.

Advertisement