IND vs AUS : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய இந்திய வீரர் – வெளியான தகவல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதலாவது போட்டி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

IND vs AUS

- Advertisement -

இதன்மூலம் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

இதனால் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பெயர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

Bumrah 2

இருப்பினும் மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதுமாக பும்ரா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் அண்மைக்காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் அவரை முழுவதும் குணமடையாமல் விரைவாகவே அணியில் இணைத்தால் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

- Advertisement -

எனவே எதிர்வரும் 50 உலகக் கோப்பையை மனதில் கொண்டு அவருக்கு இந்த தொடரிலும் ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. முற்றிலும் காயம் குணமடையும் வரை ஓய்வில் இருக்கப்போகும் அவர் அதன் பிறகே அணியில் இணைவார் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : அனில் கும்ப்ளேவின் ஆல் டைம் சாதனையை தகர்த்த அஷ்வின் – ஹர்பஜன் சாதனையையும் உடைத்து அபாரம்

தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையினை மேற்கொண்டு வரும் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர், மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என முக்கிய தொடர்களில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பலவீனமாக பார்க்கப்பட்ட வேளையில் எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பைக்கு அவர் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். எனவே அவருக்கு இன்னும் சில வாரங்கள் ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement