சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதன்முறையாக ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்த மோசமான சாதனை – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், உலகின் தலைசிறந்த பவுலருமாக பார்க்கப்படும் பும்ரா இதுவரை இந்திய அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமாகி 60 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிகவும் நேர்த்தியாக பந்து வீசும் பும்ரா ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து யார்க்கர் வீசுவதில் கில்லாடி. ஆனால் சமீப காலமாக அவருக்கு இருந்து வரும் காயத்தின் காரணமாக முன்பை போன்று சிறப்பான முறையில் அவரால் பந்து வீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

Bumrah 1

- Advertisement -

அது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பிரதிபலித்தது. ஏனெனில் காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த பும்ரா டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார்.

ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் முன்பே போதும் இல்லாத அளவு மோசமான பவுலிங் வெளிப்படுத்திய அவர் மோசமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

Bumrah 2

அதன்படி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த கடைசி போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவுலிங் ஸ்பெல்லாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு டி220 கிரிக்கெட்டில் இதுவரை அவர் ஒரு போட்டியில் நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : அடஅட, ரோஹித் சர்மா – விராட் கோலி கொண்டாட்டத்தை பார்த்து ரசிகர்கள் பூரிக்கும் வைரல் வீடியோ இதோ

டி20 உலக கோப்பை தொடரின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவருக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உலக கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement