
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. அந்தப் போட்டியில் முதலாவதாக விளையாடிய இங்கிலாந்து 587 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 145/3 ரன்கள் எடுத்து முன்னிலைப் பெறுவதற்காக முயற்சித்து வருகிறது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். 3வது போட்டியில் ஓய்வெடுத்த அவர் இப்போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியுள்ளார்.
அதனால் எதிர்பார்த்ததைப் போலவே அபாரமாக பவுலிங் செய்த அவர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக், சதத்தை அடித்த ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை ஜஸ்ப்ரித் பும்ரா போல்ட்டாக்கினார். அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் பும்ரா 13வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதனால் வெளிநாட்டு மண்ணில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் கபில் தேவ் (12) வாழ்நாள் சாதனையையும் பும்ரா உடைத்தார். இது போக சேனா நாடுகளில் முத்தையா முரளிதரனை (10) முந்தி அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற வாசிம் அக்ரம் சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா (இருவரும் தலா 11) சமன் செய்தார். அதனால் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் கௌரவப் பலகையில் பும்ரா தன்னுடைய பெயரை பொன்னெழுத்துக்களால் எழுதினார்.
இத்தனை சாதனைகளை படைத்த அவர் 5வது விக்கெட்டை எடுத்த போது பெரியளவில் கொண்டாடாமல் சாதாரணமாக சென்றார். அது பற்றி கேட்டதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா கொடுத்த பதில் பின்வருமாறு. “லார்ட்ஸில் இடம் பிடிப்பது ஸ்பெஷலானது. ஏனெனில் இங்கே நாங்கள் 4 வருடத்திற்கு ஒருமுறை விளையாடுவோம் என்பதால் அதிக வாய்ப்பு கிடைக்காது. இதை என்னுடைய மகனிடம் சொல்வேன்’
இதையும் படிங்க: இது சச்சினையே குறை சொல்லும் உலகம் சார்.. என்னை வெச்சு பணம் சம்பாரிக்கட்டும் விடுங்க.. பும்ரா பதிலடி
“உண்மை என்னவெனில் நான் சோர்வடைந்திருந்தேன். அதனால் அங்கே மகிழ்ச்சி சம்பந்தமான விஷயம் இல்லை. சில நேரங்களில் இப்படி மைதானத்தில் நீண்ட நேரம் பவுலிங் செய்யும் போது சோர்வடைவேன். இனிமேலும் விக்கெட் எடுக்கும் போது குதித்துக் கொண்டாடுவதற்கு நான் 21 – 22 வயதுடையவன் கிடையாது. அணிக்காக பங்காற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற படி மீண்டும் என்னுடைய இடத்துக்கு சென்று அடுத்த பந்தை வீசுவேன்” என்று கூறினார்.