இது சச்சினையே குறை சொல்லும் உலகம் சார்.. என்னை வெச்சு பணம் சம்பாரிக்கட்டும் விடுங்க.. பும்ரா பதிலடி

Jasprit Bumrah 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த ஊரில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 145/3 ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அப்போது ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

சச்சினையே விமர்சிக்கும் உலகம்:

அதனால் முதல் போட்டிக்கு பின் கிடைத்த 7 நாட்கள் ஓய்வு போதாதா? இந்தியாவின் வெற்றியை விட பும்ராவின் ஓய்வு முக்கியமா? என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் அப்போட்டியில் பும்ரா இல்லாமலேயே இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அப்போட்டியில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் வந்த பும்ரா இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் கௌரவப் பலகையில் தன்னுடைய பெயரை பொன்னெழுத்துகளால் பொறித்தார்.

இந்நிலையில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சினை கூட இன்றும் பலர் விமர்சிப்பதாக பும்ரா தெரிவித்துள்ளார். அதே போல தம்மையும் இந்திய அணியையும் விமர்சித்து பலரும் பணம் சம்பாதிப்பதாக தெரிவிக்கும் அவர் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அசத்துவதே தங்களுடைய வேலை என்று பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி பும்ரா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பும்ரா பதிலடி:

“கெளரவப் பலகையில் இடம் பிடித்தது நல்லது. ஆனால் விவாதங்கள் தொடரும் என்பது எனக்குத் தெரியும். இங்கே நிறைய கேமராக்கள் இருக்கிறது. நாங்கள் பயிற்சி செய்தால் கூட நிறைய கேமராக்கள் பின் தொடர்கின்றன. இது வியூவர்ஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்ஸ் நிறைந்த சகாப்தமாகும். இங்கே அனைவரும் எதையாவது பரபரப்பானதை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரியும்”

இதையும் படிங்க: அம்பயரை குறை சொல்லாதீங்க.. இந்தியா தான் தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டாங்க.. ஹார்மிசன் சாடல்

“ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது என்னுடைய கையில் இல்லை. அவற்றை செய்து மக்கள் பணம் சம்பாதித்தால் அது நல்லது. வியூவர்ஷிப்பை கொடுப்பதால் அவர்கள் என்னை குறைந்தபட்சம் ஆசிர்வதிப்பார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. இந்தியாவுக்காக விளையாடும் வரை ஒவ்வொரு வீரர்களும் விமர்சனங்களுக்குள் செல்வார்கள். தொலைக்காட்சியில் தெரியும் வரை நான் மதிப்பிடப்படுவேன். அது விளையாட்டின் ஒரு அங்கம். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் கூட சச்சின் சார் இன்று மதிப்பிடப்படுகிறார்” என கூறினார்

Advertisement