- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் முறையா 2 – 3 முறை அழுதுட்டேன்.. விராட், ரோஹித் மாதிரி ரிட்டையர்மென்ட் எப்போது? ஜஸ்ப்ரித் பும்ரா பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பையில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் ஏற்கனவே கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் ஜூலை நான்காம் தேதி நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

குறிப்பாக மும்பை கடற்கரை சாலையில் மாலை 5 மணிக்கு திறந்த வெளி பேருந்தில் பேரணியாக வந்த இந்திய அணியினர் வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினர். அதை காண்பதற்காக கடற்கரை சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அதனால் ரசிகர்களின் அன்பு கடலில் மிதந்து வந்த இந்திய அணியினர் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார்கள்.

- Advertisement -

பும்ரா அறிவிப்பு:
அங்கே பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது. அந்த விழாவில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான தொடர்நாயகன் ஜஸ்ப்ரித் பும்ராவும் பேசினார். அவரிடம் விராட், ரோஹித் போல நீங்களும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவீர்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவித்த பும்ரா இந்தியாவுக்காக இப்போது தான் வெற்றிகளை பெற்றுக்கொடுக்க துவங்கியுள்ளதாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ஓய்வு இன்னும் நீண்ட தூரத்தில் இருக்கிறது. நான் இப்போது தான் துவங்கியுள்ளேன். எனவே அது இன்னும் தூரத்தில் இருப்பதாக நம்புகிறேன். இது நம்ப முடியாத தருணம்”

- Advertisement -

“பொதுவாக நான் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் தவிப்பேன். ஆனால் என் மகனை பார்த்ததும் உணர்ச்சிகள் வருகிறது. அதே போல பொதுவாக போட்டி முடிந்த பின் நான் எப்போதும் அழ மாட்டேன். ஆனால் இப்போது 2 – 3 முறை அழுது விட்டேன். வான்கடே மைதானம் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி உள்ளது. அண்டர்-19 முதல் இங்கே நான் வந்துள்ளேன”

இதையும் படிங்க: வெற்றி பேரணி முடிந்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி. எதற்காக தெரியுமா? – விவரம் இதோ

“ஆனால் இப்படி ஒரு உணர்ச்சியான தருணத்தை பார்த்ததில்லை. எனவே என்னை நானே அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எங்களுடைய லட்சியமாகும். இதற்கு முன் நாங்கள் உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே இந்த வெற்றி எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் 30 வயது மட்டுமே நிரம்பியுள்ள பும்ரா இன்னும் 7 வருடங்களாவது விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -