வெற்றி பேரணி முடிந்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி. எதற்காக தெரியுமா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியானது நாடு திரும்பும் போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவது தாமதமாகி இருந்த நிலையில் நேற்று இந்திய அணி டெல்லி வந்து தரையிறங்கியது.

அங்கு பிரதமருடன் காலை உணவு எடுத்துக்கொண்ட இந்திய அணியினர் பின்னர் மும்பை வந்தடைந்தனர். அப்படி மும்பை வந்த இந்திய அணி திறந்தவெளி பேருந்தில் வெற்றி பேரணியில் ஈடுபட்டனர். மெரைன் ட்ரைவ் பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பேருந்து ஆமை வேதத்தில் சென்றது.

- Advertisement -

பின்னர் ஒருவழியாக வான்கடே மைதானத்திற்கு இந்திய அணி சென்றடைந்தது. ரசிகர்கள் வழி நெடுகிலும் நின்று இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பை அளித்தனர். பின்னர் வான்கடே மைதானத்திற்கு சென்றடைந்த இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பிசிசிஐ சார்பாக அறிவிக்கப்பட்ட 125 கோடி பரிசுத்தொகை இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்திய வீரர்கள் மைதானம் முழுவதும் வலம் வந்தனர். அப்போது இந்திய அணியின் வீரர்கள் டான்ஸ் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிய வேளையில் விராட் கோலி மட்டும் நேரடியாக அங்கிருந்து மும்பை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை நேரில் கண்டு களித்த அனுஷ்கா சர்மா பின்னர் அதன் பிறகு நாடு திரும்பாமல் தனது குழந்தைகளுடன் லண்டனுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வாட்டர் கேனான் வரவேற்பு – எதற்கு தெரியுமா?

எனவே தற்போது தனது குடும்பத்தினரை சந்திக்க விராட் கோலி லண்டன் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்ற கோலி அந்த போட்டியுடன் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement