IND vs IRE : அது உங்களோட பிரச்சனை, ட்ராவிட் – ரோஹித் கவலை குறித்து – கம்பேக் கொடுக்கும் பும்ரா மாஸ் பேட்டி

Jasprit Bumrah
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2023 உலகக் கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இத்தொடரில் 2024 டி20 உலக கோப்பை தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் ஜெயிஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அவை அனைத்தையும் விட இத்தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து கேப்டனாக கம்பேக் கொடுக்க உள்ளதே அனைவரிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bumrah

- Advertisement -

கடந்த 2018 முதல் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை திணறடித்து முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்தார். அதில் முழுமையாக குணமடையாமல் நாட்டுக்காக முக்கிய தொடர்களில் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் அவசரமாக களமிறங்கிய அவர் மீண்டும் 2 முறை காயத்தை சந்தித்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

மனம் திறந்த பும்ரா:
இருப்பினும் 11 மாதங்களாக குணமடைந்துள்ள பும்ரா 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பார் என்று எதிர்பார்ப்பதாக ராகுல் ட்ராவிட், ரோஹித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இத்தொடரில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கும் தாம் அபாரமாக செயல்படுவேன் என்று அனைவரும் எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சனை என்று தெரிவிக்கும் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்த பின் முதல் முறையாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

IND-vs-IRE

“மீண்டும் விளையாட வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட காலமாக என்சிஏவில் இருந்து கடினமாக உழைத்து தற்போது வந்துள்ளதில் மகிழ்ச்சியடையும் நான் அடுத்து வரும் போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். சில விஷயங்கள் எப்போதும் உங்களது கைகளில் இருக்காது. உங்களுடைய உடலுக்கு தேவையான மதிப்பை கொடுத்து அது குணமடைவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். ஆனால் அது உங்களுக்கு பசியையும் ஏற்படுத்தும். மேலும் என்னுடைய உடல் குணமடைந்ததும் என்னால் இன்னும் சிலவற்றை எக்ஸ்ட்ரா செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்”

- Advertisement -

“என்சிஏ மட்டுமல்லாமல் குஜராத்தில் இருக்கும் என்னுடைய வீட்டிலும் நான் பயிற்சிகளை செய்தேன். அதனால் தற்போது எந்த எல்லையும் இல்லாமல் நான் நன்றாக உணர்கிறேன். பொதுவாக நீங்கள் காயத்தை சந்திக்கும் போது அது விரக்தியை ஏற்படுத்தும். அப்போது நீங்கள் உங்கள் மீது சந்தேகப்படாமல் கம்பேக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் என்னுடைய உடல் மீது நம்பிக்கை வைத்த நான் சோதனை காலங்களிலும் கேரியர் முடிந்துவிட்டது என்று எப்போதும் நினைத்ததில்லை”

Bumrah

“மாறாக நேர்மறையாக இருந்து குணமடையும் வேலையில் ஈடுபட்ட நான் விரும்பும் விளையாட்டில் மீண்டும் விளையாட வந்துள்ளேன். மேலும் விமர்சிப்பவர்களின் கருத்தை நான் மதிக்கிறேன். இருப்பினும் அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை நான் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக அதனால் என் மீது பாரத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. தற்சமயத்தில் என் மீது எனக்கு எவ்விதமான பெரிய எதிர்பார்ப்புகளும் கிடையாது. நீண்ட காலம் கழித்து வந்துள்ளதால் இந்த தருணங்களில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன்”

இதையும் படிங்க:பேக்அப் கீப்பரும் சஞ்சு சாம்சனும் அவசியமில்ல, அந்த 2 இளம் வீரர்களே போதும் – தமது 2023 உ.கோ அணியை வெளியிட்ட சந்தீப் பாட்டில்

“இந்த சமயத்தில் என்னால் அதிகமாக பங்காற்ற முடியும் அல்லது போட்டியை மொத்தமாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் சிறிய எதிர்பார்ப்புடன் தான் வந்துள்ளேன். ஒருவேளை மற்றவர்கள் என்னிடம் அதிகமாக எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சினையாகும். இப்போதும் நான் அதே நபராகவே இருக்கிறேன். என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 18இல் நடைபெறும் முதல் போட்டியில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் முதல் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement