பேக்அப் கீப்பரும் சஞ்சு சாம்சனும் அவசியமில்ல, அந்த 2 இளம் வீரர்களே போதும் – தமது 2023 உ.கோ அணியை வெளியிட்ட சந்தீப் பாட்டில்

- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் துவங்குகிறது. அதில் 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரில் நிலவும் பிரச்சனைகளும் காயங்களும் பெரிய குழப்பத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பது 2023 ஆசிய கோப்பை அணியை தேர்வு செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tilak-Varma-and-SKY

- Advertisement -

அதே போல ரிஷப் பண்ட் காயமடைந்ததால் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுலும் இன்னும் குணமடையாமல் இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. இது போக 2011 உலகக் கோப்பை வெற்றியில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாக இருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பேக்அப் கீப்பர் வேண்டாம்:
இருப்பினும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி 20 வயதிலேயே முதிர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்திய திலக் வர்மாவை தேர்வு செய்து அந்த 2 பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த உலகக் கோப்பையில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று மற்றொரு தரப்பு விரும்புகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையில் ராகுல், ஸ்ரேயாஸ் ஆகிய இருவருமே காயத்திலிருந்து குணமடையாமல் போனால் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரை தேர்வு செய்யலாம் என்று முன்னாள் நட்சத்திர வீரர் சந்திப் பாட்டீல் கூறியுள்ளார். மேலும் பேக்-அப் விக்கெட் கீப்பர் தேவையில்லை என்று கூறும் அவர் இஷான் கிசானை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். அத்துடன் ஒருவேளை இஷான் கிசான் காயமடைந்து வெளியேறினால் மட்டுமே சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“திலக் வர்மாவுக்கு விரைவில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கொடுப்பது 100% சரியாக இருக்கும். மேலும் நான் திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்தேன். அதில் யார் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதை எதிரணியை பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளலாம். மேலும் உலகக்கோப்பை அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பர் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். இத்தொடர் நம்முடைய சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அதனால் ஒருவேளை இஷான் கிஷானுக்கு காயமடைந்தால் நம்மால் ஒரே நாள் இரவில் சஞ்சு சாம்சன் போன்றவரை தேர்வு செய்ய முடியும்” என்று கூறினார்.

அப்படி வலது கை வீரராக இருப்பதால் நிறைய முன்னாள் வீரர்களும் நட்சத்திரங்களும் சஞ்சு சாம்சனுக்கு 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய குறைவான ஆதரவையே தெரிவித்து வருகிறார்கள். போதாகுறைக்கு நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சுமாராக செயல்பட்டதால் அவருக்கு ஆசிய கோப்பை அணியிலேயே வாய்ப்பு கிடைப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக திலக் வர்மா, சூர்யகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளது.

இதையும் படிங்க:IND vs IRE : 11 மாசம் ஆச்சி.. என்ன பண்ணப்போறாரோ? பும்ராவின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு – எதற்கு தெரியுமா?

உலகக் கோப்பை 2023 தொடருக்காக சந்திப் பாட்டீல் தேர்வு செய்த தம்முடைய இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், சர்துள் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முஹமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்.

Advertisement