IND vs IRE : 11 மாசம் ஆச்சி.. என்ன பண்ணப்போறாரோ? பும்ராவின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு – எதற்கு தெரியுமா?

Bumrah
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றியுடன் இந்திய அணி துவங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

IND

- Advertisement -

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது இந்த தொடரில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப காத்திருக்கிறது.

அதுமட்டும் இன்றி சீனியர் வீரர்கள் இன்றி முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட பும்ரா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு செயல்பட போகிறது? என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதனையும் தாண்டி பும்ராவின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

Bumrah 1

அதற்கு காரணம் யாதெனில் : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அவர் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனிடையில் டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என பல்வேறு முக்கியமான போட்டிகளை தவறவிட்டார்.

- Advertisement -

அதன்பின்னர் தற்போது மீண்டும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக இந்த தொடரில் இணைந்துள்ளார். இந்த தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தால் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் அவரால் முழுமையாக விளையாட முடியும் என்பதனால் அவரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது,

இதையும் படிங்க : இந்திய அணியுடன் விளையாடுவது தெருக்குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சமம்னு சொன்னேனா? பாக் வீரர் கொந்தளிப்பு

அதோடு பும்ரா அயர்லாந்து நாட்டிற்கு சென்று பயிற்சி செய்து வரும் வேளையில் இந்த தொடரில் அவர் முழு உடற்தகுதியுடன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement