
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி மட்டும் தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டு அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது.
அதனை தொடர்ந்து இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கின்றனர்.
அதோடு இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில் தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய போது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் அவர் 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவ அறிக்கைகள் விரைவில் மருத்துவக் குழு நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும் என்றும் ஒருவேளை அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அவர் நியூசிலாந்துக்கு அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ
இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே கூறலாம். ஒருவேளை அவர் அணியின் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.