இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள 3 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்து முடிந்த வேளையில் 2 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள மாற்றம் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஜனவரி 28-ஆம் தேதி நாளை ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில் ஏற்பட உள்ள மாற்றங்களை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் நாளைய இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டாவது டி20 போட்டியின் போது விளையாடிய துருவ் ஜுரேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அவர்களுக்கு பதிலாக ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் கடந்த போட்டியின் போது தனக்கு கிடைத்த வாய்ப்பை துருவ் ஜுரேல் பயன்படுத்திக் கொள்ள தவறியதால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே அந்த இடத்தில் விளையாடுவார். அதேபோன்று சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் அவர் தற்போது வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரமன்தீப் சிங் விளையாட வாய்ப்புள்ளது. அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டியிலும் முகமது ஷமி விளையாட வாய்ப்பில்லை.. கம்பேக் எப்போது? – வெளியான தகவல்

1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஷிவம் துபே, 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ரமன்தீப் சிங், 9) ரவி பிஷ்னாய், 10) அர்ஷ்தீப் சிங், 11) வருண் சக்ரவர்த்தி.

Advertisement