- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அமெரிக்கா அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட வாய்ப்பில்லை – காரணம் என்ன?

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தொடங்கியுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.

முதல் போட்டியை தவறவிடும் ஜஸ்ப்ரீத் பும்ரா :

இவ்வேளையில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இந்திய அணி மூன்று விதமான துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களை கொண்டு பலமான அணியாக இருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இன்று விளையாட இருக்கும் இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்கா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு போட்டி துவங்கவுள்ள வேளையில் இன்றைய போட்டியில் நட்சத்திர வீரர் ஒருவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த முதல் போட்டியை தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நேற்று பயிற்சியில் ஜஸ்ப்ரீத் பும்ரா கலந்து கொண்டாலும் பந்துவீச வில்லை என்றும் அதேபோன்று அவருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் இருப்பதால் இந்த முதல் போட்டியை அவர் தவறவிடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத சாதனையை செய்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

இந்திய அணியின் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் இருக்கும் அவர் இன்னும் சில நாட்களிலேயே காய்ச்சலில் இருந்து வெளியேறும் வேளையில் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -