இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. இந்திய அணியின் இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய அசத்தல் சாதனை :
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 411 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 80 பந்துகளை சந்தித்த அவர் 15 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர் என 175 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இந்த இறுதி போட்டியில் 175 ரன்கள் குவித்ததன் மூலம் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதோடு இந்த தொடரிலும் அவர் அதிக ரன்களை குவித்ததால் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இப்படி ஒரு அணி கோப்பையை வென்று அந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மற்றும் அந்த தொடரின் நாயகன் விருது என இரண்டையும் பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவை தாண்டாம உங்களால் இந்த டி20 வேர்ல்டுகப்பை ஜெயிக்க முடியாது – டேரன் சமி ஓபன்டாக்
இதற்கு முன்னதாக இவர் எந்த ஒரு வீரரும் இதுபோன்று இரண்டு விருதுகளையும் ஒன்றாக வென்றது கிடையாது. அதோடு 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் வைபவ் சூரியவன்ஷி நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



