ஒரு வருஷம் ஆகப்போகுது.. இந்திய அணியில் இணையப்போகும் பும்ரா. எந்த தொடரில் தெரியுமா? – வெளியான நற்செய்தி

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஓராண்டாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வரும் பும்ரா காயத்திற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் பிளேயிங் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கியமான தொடர்களில் பும்ரா இடம்பெறாதது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலாவது பும்ரா தயாராகி இந்திய அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கும் வேளையில் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால் அது நல்ல நம்பிக்கையை கொடுக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Bumrah

இந்நிலையில் கடந்த ஓராண்டாக எவ்வித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வரும் பும்ரா தற்போது சரியான பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனவே எதிர்வரும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ள வேளையில் அந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாட பும்ரா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்ற மருத்துவ அறிவிக்கை வெளியாகியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : மாற்றம் ஒன்றே மாறாதது, பரவால்ல என்னோட கேரியர் முடிஞ்சுன்னு தெரியும் – நட்சத்திர சீனியர் வீரர் பெருமிதமான பேட்டி

அதுமட்டும் இன்றி அவர் அயர்லாந்து தொடரில் அசத்தும் பட்சத்தில் நிச்சயம் அடுத்தடுத்து முறையான பயிற்சிகளை மேற்கொண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட முற்றிலும் தகுதி பெறவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement