மாற்றம் ஒன்றே மாறாதது, பரவால்ல என்னோட கேரியர் முடிஞ்சுன்னு தெரியும் – நட்சத்திர சீனியர் வீரர் பெருமிதமான பேட்டி

Shardul-Thakur
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறும் சமயத்தில் சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 தொடரும் நடைபெற உள்ளது. அதனால் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பையில் பங்கேற்கும் என்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் முழுவதுமாக இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணி களமிறங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் காரணமாக நட்சத்திர சீனியர் இந்திய தொடக்க வீரர் சிகர் தவானின் கேரியர் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது.

Virat Kohli Shikhar Dhawan

- Advertisement -

கடந்த 2010இல் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறிய அவர் கேப்டன் தோனியின் மகத்தான முடிவால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். மேலும் 2015 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராக அசத்திய அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க்ப் பேட் விருது வென்று வெற்றிக்கு போராடி 2018 ஆசிய மற்றும் நிதஹாஸ் கோப்பைகளில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

பெருமிதமான பேட்டி:
இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்தது வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் மீண்டும் திரும்பிய போது அந்த இடத்தை கேஎல் ராகுல் தனதாக்கி விட்டார். மறுபுறம் வயது காரணமாக சமீப காலங்களாகவே தடுமாறிய தவான் இதற்கு முன் ஆற்றிய பங்கிற்காக வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற 2வது தர தொடர்களில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது போலவே இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை வழி நடத்துவார் என்று செய்திகள் வெளியானது.

Shikhar-Dhawan

ஆனால் சுப்மன் கில், ஜெயிஸ்வால், இஷான் கிசான் போன்ற நிறைய அடுத்த தலைமுறை வீரர்கள் வந்து விட்டதால் கழற்றி விடப்பட்டுள்ள தவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று நிதர்சனத்தை உணர்ந்து பெருமிதமாக பேசியுள்ளார். குறிப்பாக தம்முடைய கேரியர் முடிந்தது தெரியும் என்று மறைமுகமாக கூறும் அவர் இளம் வீரர்கள் புதிய திட்டங்களுடன் விளையாடுவதை ஆச்சரியமளிப்பதாக தெரிவித்து இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நமது வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே நேரத்திற்கு தகுந்தார் போல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மேலும் இளம் வீரர்கள் எந்தளவுக்கு புதிய திட்டங்கள் மற்றும் புதிய சிந்தனைகளுடன் வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் நீண்ட காலமாக விளையாடினாலும் இப்போதும் இளம் வீரர்களிடம் உத்வேகத்தை எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக சூரியகுமார் யாதவ் வித்தியாசமாக சிக்ஸர் அடிக்கும் போது அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அவர் சாதாரணமாக குனிந்து இதை செய்தேன் என்று சொன்னார். அப்போது நானும் இதை வலைப்பயிற்சியில் செய்து பார்க்கிறேன் என்று அவரிடம் நான் பதிலளித்தேன்”

dhawan 1

“ஏனெனில் புதிய நுணுக்கங்களை சேர்ப்பது அற்புதமாகவும் நல்ல மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும் எங்களுடைய காலத்தில் இருந்த பயிற்சியாளர்கள் எங்களை நேராக தரையுடன் விளையாடுமாறு சொன்ன நிலையில் இப்போதுள்ளவர் வித்தியாசமாக அடிக்கிறார்கள். எங்களாலும் அவ்வாறு அடிக்க முடியும் என்றாலும் நாங்கள் தரையுடன் அடிக்கும் மனநிலையுடனேயே வளர்ந்து விட்டோம். இருப்பினும் நாங்களும் அதை கற்பதில் எந்த தவறுமில்லை. மேலும் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகவும் சிறந்த உணர்வாக இருக்கும். அதற்காகத்தான் நீங்கள் இருதரப்பு தொடர்களிலும் விளையாடுகிறீர்கள்”

இதையும் படிங்க:வீடியோ : மோதி பாப்போம் வாங்க, அனுபவமிக்க வங்கதேசத்துடன் வீரர்களுடன் மோதிய அனுபவமற்ற இந்திய படை – தடுத்த சாய் சுதர்சன்

“உங்களுடைய முதன்மையான இலக்கு உலக கோப்பையாக இருக்கும். அதை படிப்படியாக வெல்லும் பயணமாகவே நீங்கள் இருதரப்பு தொடர்களில் விளையாடுகிறீர்கள். அத்துடன் முதல் முறையாக உலகக் கோப்பை அணியில் என்னுடைய பெயர் இடம் பெற்ற போது நானும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளேன் என்ற மிகப்பெரிய பெருமையாக கருதினேன். எனவே ஒரு வீரருக்கு உலகக்கோப்பை என்பது மிகவும் பெரிய கௌரவம் என்பதுடன் அழுத்தமான தொடராகும்” என்று கூறினார்.

Advertisement