மோதி பாப்போம் வாங்க, அனுபவமிக்க வங்கதேசத்துடன் வீரர்களுடன் மோதிய அனுபவமற்ற இந்திய படை – தடுத்த சாய் சுதர்சன்

- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஏ அணி ஃபைனலுக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது. 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற அனுபவம் மிகுந்த யாஷ் தூள் தலைமையில் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அமீரகம் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் அடுத்தடுத்த சிக்சர்களுடன் சதமடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அந்த நிலைமையில் நேற்று கொழும்புவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா ஏ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் போராடி 211 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துள் 66 (85) ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரஹிபுல் ஹசன், மெஹிதி ஹசன், ஜேசன் சாகிப் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சீறிப்பாய்ந்த இந்திய வீரர்கள்:
அதை துரத்திய வங்கதேச அணிக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டன்சித் ஹசன் 51 (56) ரன்களும் முகமத் நைம் 38 (40) ரன்களும் எடுத்த போது இந்தியாவின் வெற்றி பறிபோனதாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களை சரியான நேரத்தில் அவுட்டாக்கி அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா 34.2 ஓவர்களில் வங்கதேசத்தை 160 ரன்களுக்கு சுருட்டி சிறப்பான வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிசாந்த் சிந்து 5 விக்கெட்டுகளும் மாணவ் சுதர் 3 விக்கெடுகளும் சாய்த்தனர்.

பொதுவாக சர்வதேச அளவில் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளே பரபரப்பாக இருக்கும் என்பதுடன் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே கொண்டாடுவதும் வம்பிழுப்பதும் வங்கதேசத்திற்கு கைவந்த கலையாகும். அதற்கு அமைதியாக இருந்து வெற்றி பெற்ற பின் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுப்பதும் வழக்கமாகும். அந்த போல இந்த ஜூனியர் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட்டான போதெல்லாம் வங்கதேச பவுலர்களும் ஃபீல்டர்களும் அதை வெறித்தனமாக கொண்டாடி சில வார்த்தைகளையும் உபயோகித்து பெவிலியன் அனுப்பி வைத்தனர்.

- Advertisement -

அப்போது அமைதியாக இருந்த இந்திய அணியினர் நிகின் ஜோஸ் வீசிய 26வது ஓவரின் 2வது பந்தில் முக்கிய வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த போது அதற்கு பதிலடி கொடுத்தனர். குறிப்பாக அந்த கேட்ச்சை தரையோடு தரையாக தாவி அபாரமாக பிடித்த இளம் வீரர் யுவ்ராஜ்சிங் சிசோடியா அதே வேகத்துடன் எழுந்து பந்தை வங்கதேச வீரர்கள் முகத்தில் வீசுவதற்கு நிகராக தரையில் எரிந்து வெறித்தனமாக கொண்டாடினார்.

அதே போல சௌமியா சர்க்கார் அருகில் சென்று மற்றொரு இந்திய வீரர் ஹர்ஷித் ராணா கிட்டத்தட்ட விராட் கோலி போல வெறித்தனமாக கொண்டாடினார். மறுபுறம் எல்பிடபிள்யயூ ஆனோமா அல்லது கேட்ச் கொடுத்தோமா என்பது தெரியாமலேயே நின்ற சௌமியா சர்க்கார் வெறித்தனமாக கொண்டாடிய இந்திய வீரர்களால் கடுப்பாகி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மோதிப் பார்க்கலாம் வாங்க என்று இந்திய வீரர்களும் சண்டைக்கு சென்ற நிலையில் தமிழகத்தின் சாய் சுதர்சன் போன்ற சில வீரர்களும் நடுவரும் உள்ளே புகுந்து சண்டை வராமல் பார்த்துக் கொண்டனர்.

- Advertisement -

இங்கே மற்றொரு விஷயம் என்னவெனில் முகமத் நைம் 30, ஜாகிர் ஹசன் 4, கேப்டன் சைப் ஹசன் 8, ஹசன் ஜாய் 9, 30 வயதாகும் சௌமியா சர்கார் 134, மெஹிதி ஹசன் 41 என வங்கதேஷ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் சேர்ந்து மொத்தம் 226 சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள். ஆனால் இந்திய அணியில் யாஷ் துள் முதல் சாய் சுதர்சன் வரை யாருமே ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாதவர்கள்.

இதையும் படிங்க:அவரோட கேரியர் முடிஞ்ச்சு, இதை மட்டும் செஞ்சா ரோஹித்துக்கு பின் நீங்க தான் அடுத்த கேப்டன் – ரகானேவுக்கு ஜாஃபர் அறிவுரை

அந்தளவுக்கு அனுபவமிக்க வங்கதேசத்தை திறமையால் தோற்கடித்த அனுபவமற்ற இந்திய வீரர்கள் அடுத்ததாக ஜூலை 23ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் 74 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க வீரர்களை கொண்ட பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement