பும்ரா முதல் சாம்சன் வரை யோயோ டெஸ்டில் கலந்து கொள்ளாத 5 இந்திய வீரர்கள் – காரணம் இதோ

Bumrah
- Advertisement -

பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெறப் போகும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 6 அணிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை நிம்மதியடைய வைத்தது.

Asia Cup INDIA

- Advertisement -

இதை தொடர்ந்து விரைவில் இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணியினருக்கு பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி சோதனைகள் நடத்தப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமானதாக பார்க்கப்படும் யோயோ டெஸ்டில் அனைத்து வீரர்களும் உட்படுத்தப்பட்டனர். அதில் நவீன கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு சொந்தக்காரராக அறியப்படும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 16.5க்கு 17.2 மதிப்பெண்கள் பெற்று முதல் ஆளாக தேர்ச்சி பெற்றதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பங்கேற்காத 5 வீரர்கள்:
இருப்பினும் விதிமுறை மீறி அந்த ஸ்கோரை எப்படி சமூக வலைதளத்தில் பதிவிடலாம்? என்று விராட் கோலியை பிசிசிஐ எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. இறுதியாக நிறைவு பெற்ற அந்த யோயோ டெஸ்டில் இருப்பதிலேயே அதிகபட்சமாக இளம் வீரர் சுப்மன் கில் தன்னுடைய சீனியரான விராட் கோலியை மிஞ்சி அதிகபட்சமாக 18.5 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதே போல ரோஹித் சர்மா போன்ற இதர வீரர்கள் தேவையான மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றதாகவும் செய்திகள் தெரிவித்தன.

News YOYO

இந்நிலைமையில் இந்த யோயோ சோதனையில் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய 5 வீரர்கள் பங்கேற்கவில்லை என புதிதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே காயத்தை சந்தித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த கேஎல் ராகுல் பயிற்சிகளை செய்யும் போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்திருப்பதால் இந்த ஆசிய கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

எனவே தற்போது குணமடைந்து வரும் அவர் முழுமையான ஃபிட்னஸ் எட்டாத காரணத்தால் இந்த கடினமான யோயோ உட்படுத்தப்படவில்லை என்றும் பின்னர் தனியாக சோதனை நடத்தப்படும் என்றும் தெரிய வருகிறது. மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே காயத்திலிருந்து குணமடைந்து யோயோ சோதனையில் தேர்ச்சி பெற்று தான் அயர்லாந்து டி20 தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டனர். அதன் காரணமாக அவர்களுக்கு இந்த புதிய யோயோ சாதனையில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

INDvsPAK

இதையும் படிங்க:இந்தியா போன்ற அணிகளை வீழ்த்தி 2023 உ.கோ ஜெயிக்கும் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் – ஸ்டோனிஸ் அதிரடி பேட்டி

அதே போல திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏற்கனவே இந்த சோதனையில் தேர்ச்சி பெற்று அயர்லாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதால் புதிய சோதனையில் உட்படுத்தப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா களமிறங்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement