இந்தியா போன்ற அணிகளை வீழ்த்தி 2023 உ.கோ ஜெயிக்கும் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் – ஸ்டோனிஸ் அதிரடி பேட்டி

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011இல் தோனி தலைமையில் சரித்திரம் படைத்தது போல் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் அதற்கு போட்டியாக நடப்பு சாம்பியன், இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா, கருப்பு குதிரை நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs AUS KL Rahul Jadeja

- Advertisement -

முன்னதாக நவீன கிரிக்கெட்டில் உலகம் முழுவதிலும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாருமே பங்கேற்பதற்கு பிசிசிஐ அனுமதிப்பதில்லை. மறுபுறம் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அனைத்து விதமான வெளிநாட்டவர்களும் களமிறங்கி இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களை தெரிந்து கொள்வதுடன் இந்தியாவின் கால சூழ்நிலைகளில் எப்படி அசத்த வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். அதன் காரணமாக சர்வதேச அளவில் அல்லது ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் புரட்டி எடுக்கும் வெளிநாட்டு அணிகள் வெற்றியை அசால்டாக தட்டிச் செல்கின்றன.

ரகசியம் தெரியும்:
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் இந்தியாவின் கால சூழ்நிலைகள் மட்டுமல்லாமல் சேப்பாக்கம், மும்பை, கொல்கத்தா போன்ற அனைத்து மைதானங்களின் பவுண்டரி அளவு கூட தங்களுக்கு நன்றாக தெரியும் என்று ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் கூறியுள்ளார். அதனால் கடந்த பிப்ரவரியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தது போல இந்த உலகக் கோப்பையையும் தங்களால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Stoinis 2

“ஆம் அடுத்த வருடம் நான் 9வது முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேன். என்னை போலவே டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், கேமரூன் கிரீன் என்ன எங்களுடைய பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உலகக்கோப்பை நடைபெறும் போது எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் பிட்ச் எப்படி இருக்கும் என்பது போன்ற தெளிவான ஐடியா எங்களுக்கு இருக்கிறது”

- Advertisement -

“மேலும் மைதானத்தின் பவுண்டரி அளவுகளும் நன்றாக தெரிந்திருப்பதால் எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் எங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால் எங்களுடைய வீரர்கள் இந்தியாவை 2வது வீடாக பார்க்கிறோம். மேலும் ஆஸ்திரேலியர்களை விட இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள்”

stoinis

இதையும் படிங்க:வீரர்களுக்கும் சரி.. எங்களுக்கும் சரி ஒரே ரூல்ஸ் தான். பாக் வாரியத்தின் அழைப்பை நிராகரித்த – பி.சி.சி.ஐ (விவரம் இதோ)

“அந்த வகையில் வீரர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை நான் மதிக்கிறேன். குறிப்பாக வார்னருக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். போட்டிகளின் போது அவர்கள் கொடுக்கும் ஆரவாரங்களால் நீங்கள் பேசுவதை கூட கேட்க முடியாது. அந்தளவுக்கு ஆர்வமான ரசிகர்களை கொண்ட இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை ஸ்பெஷலாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement