- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் நாளே தென்னாப்பிரிக்காவை முடித்து விட்ட பும்ரா.. இந்திய வீரராக அசத்தல் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் நாளில் 55 ஓவர்களை மட்டுமே பிடித்த வேளையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்களையும், முல்டர் மற்றும் டோனி ஜார்சி தலா 24 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த முதல் இன்னிங்ஸில் 14 ஓவர்களை வீசிய அவர் 5 மெய்டன்களுடன் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்த இன்னிங்ஸில் அவர் எடுத்த 5 விக்கெட்டுகள் மூலம் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16-வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்திய அணி சார்பாக அதிகமுறை 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய வீரராக அஸ்வின் 37 முறை எடுத்து முதலிடத்திலும், அணில் கும்ப்ளே 35 முறை எடுத்து இரண்டாவது இடத்திலும், ஹர்பஜன் சிங் 25 முறை எடுத்து மூன்றாவது இடத்திலும், கபில் தேவ் 23 முறை எடுத்து நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : இந்த தலைமுறையின் சிறந்த வீரர் இவர்தான்.. அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி – ஜெய்ஸ்வால் ஓபன்டாக்

இவ்வேளையில் தற்போது பகவத் சந்திரசேகருடன் ஐந்தாவது இடத்தை பும்ரா பகிர்ந்துள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2019 ஆம் ஆண்டு இஷாந்த் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டியின் முதல் நாளே 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருந்த வேளையில் அவருக்கு அடுத்ததாக போட்டியின் முதல் நாளிலேயே ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -