சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்த வேளையில் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய டெஸ்ட் அணி இப்படி அடுத்தடுத்த இரண்டு தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
அதற்கடுத்து தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரத்யேக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடுவது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில்லுடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜென்டில்மேன் என்பது மட்டுமின்றி எனக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருக்கிறார். அவருடன் இணைந்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.
அவருடன் இணைந்து விளையாடுவது நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது என்று ஜெய்ஸ்வால் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கரியர் நம்ப முடியாத ஒன்று அவர்கள் என்னையும் சேர்த்து பல கோடி இளைஞர்களை இன்ஸ்பயர் செய்துள்ளனர். அவர்களது இடத்தை நிரப்புவது என்பது நிச்சயம் என்னால் முடியாது.
இதையும் படிங்க : என்னால் கண்டிப்பா ரோஹித், கோலி இடத்தை நிரப்ப முடியாது.. ஆனால் இதை செய்ய முடியும் – ஜெய்ஸ்வால் வெளிப்படை
ஆனால் என்னுடைய பலத்தை அறிந்து நான் இந்திய அணியின் வெற்றிக்காக என்னுடைய உழைப்பை கண்டிப்பாக அளிப்பேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். அவர்கள் அளித்த அறிவுரைகள் என்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்கு உதவுவதாகவும் சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



