- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. மெல்போர்ன் மைதானத்தில் மாபெரும் சாதனை

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 311-6 ரன்கள் எடுத்துள்ளது. சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா இதுவரை 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வருவதை அறிவோம். அப்படிப்பட்ட அவரை இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தது ரசிகர்களை ஆனந்தமடைய வைத்தது.

- Advertisement -

கும்ப்ளேவை முந்தி:

அதன் வாயிலாக டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கிய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார். இதற்கு முன் வேறு எந்த இந்திய பவுலரும் அவரை டக் அவுட் செய்ததில்லை. அதை விட இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து மெல்போர்ன் மைதானத்தில் பும்ரா மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 18* (3 போட்டிகள்)
2. அனில் கும்ப்ளே: 15 (3 போட்டிகள்)
3. கபில் தேவ்: 14 (3 போட்டிகள்)
4. ரவிச்சந்திரன் அஸ்வின்: 14 (3 போட்டிகள்)

- Advertisement -

மெல்போர்ன் நாயகன்:

1877ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் தான் வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்படிப்பட்ட பழமை வாய்ந்த மைதானத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளது அவருடைய திறமைக்கு மற்றுமொரு சான்று என்றே சொல்லலாம். மேலும் 2018ஆம் ஆண்டு அவர் இங்கே 33 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி – விவரம் இதோ

அதன் வாயிலாக மெல்போர்ன் மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா ஏற்கனவே படைத்துள்ளார். தற்போது இந்தப் போட்டியில் இந்தியா கொஞ்சம் தடுமாற்றத் துவக்கத்தை பெற்றுள்ளது. அதனால் அதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவை ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -