டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி – விவரம் இதோ

Melbourne
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதியான இன்று மெல்போர்ன் நகரில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி எதிர்பார்த்ததை விடவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சாதனை நிகழ்த்திய பாக்சிங் டே டெஸ்ட் போட்டி :

அந்த வகையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த டேஸ் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக மார்னஸ் லாபுஷேன் 72 ரன்களும், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து உஸ்மான் கவாஜா 57 ரன்களையும், அலெக்ஸ் கேரி 31 ரன்களையும் குவித்தனர். அதேபோன்று முதல் நாள் முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்று ரசிகர்கள் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்த சாதனை யாதெனில் :

- Advertisement -

போட்டியின் முதல் நாளான இன்று 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் மெல்போர்ன் மைதானத்திற்குள் வந்து போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது.

இதையும் படிங்க : இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளி எலைட் லிஸ்ட்டில் இடம்பிடித்து மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் முழுவதுமாக நடைபெறும் பட்சத்தில் கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் நிச்சயம் மைதானத்திற்கு நேரில் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement