மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ஜஸ்ப்ரீத் பும்ரா. எப்போது தெரியுமா? – ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை என முக்கியமான தொடர்களில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நிச்சயம் அவர் மும்பை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bumrah

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பும்ரா காயம் காரணமாக விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலாவது அவர் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்த்த வேளையில் அப்போதும் அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கவில்லை. எனவே எப்போதுதான் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றே கேள்வியே அதிகளவு இருந்து வருகிறது.

சமீப காலமாகவே இந்திய அணியில் காயத்தால் பாதிக்கப்படும் வீரர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறி வரும் வேளையில் தற்போது காயத்திலிருந்து மீண்டு பும்ரா இந்திய அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Bumrah 1

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாகவே அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு திரும்புகிறார் என்று ஒரு முக்கிய நிர்வாகி கூறியதாக பிரபல தனியார் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில் : இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக பும்ரா பங்கேற்கிறார். காயத்தால் நீண்ட கால ஓய்வில் இருந்து திரும்ப இருக்கும் அவர் நிச்சயம் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வலு சேர்ப்பார் என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : காற்றில் பறந்து டிஎன்பிஎல் வரலாற்றின் மிகசிறந்த கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின் – வியந்த வர்ணனையாளர்கள்

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அதற்கு முன்னதாக காயத்திலிருந்து ஒவ்வொரு வீரராக மீண்டும் அணியில் இணைய வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement