- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதயத்தை ஜெர்ஸியில் வெச்சுருப்பாரு.. இப்போவும் அவர் லீடர் தான்.. தோனி, விராட், ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி பும்ரா

ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் பலருக்கும் பிடித்த உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்தார். அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் தொடர்நாயகன் விருதை வென்றார்.

அந்த வகையில் கடந்த 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் பும்ரா இந்தியாவின் முதன்மை பவுலராக முன்னேறியுள்ளார். அதனால் பும்ரா தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்.எஸ். தோனியும் தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலியும் சமீபத்தில் பாராட்டினர். அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா தமக்கு மிகவும் பிடித்த உலகின் நம்பர் ஒன் பவுலர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் பாராட்டியிருந்தார்.

- Advertisement -

கேப்டன்களின் ஆதரவு:
இந்நிலையில் இந்தளவுக்கு தாம் வளர்வதற்கு உதவிய இந்திய கேப்டன்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பற்றி பும்ரா பேசியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின் 2017 – 2021 வரை விராட் கோலி தலைமையில் அவர் அதிகமாக வளர்ந்தார்.

தற்போது முன்னாள் ஐபிஎல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தம்முடைய 3 இந்திய கேப்டன்கள் பற்றி பும்ரா பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து வீச்சளார்களிடம் அனுதாபம் கொள்ளும் சில கேப்டன்களில் ரோஹித் சர்மா ஒருவர். அவர் வீரர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து செயல்படுவார்”

- Advertisement -

“ரோஹித் சர்மா மிகவும் கடுமையானவர் அல்ல. அவர் பவுலர்களின் கருத்துக்களை கேட்க திறந்த மனதுடன் தயாராக இருப்பார். எம்எஸ் தோனி எனக்கு வேகமாக நிறைய பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தார். அவர் எப்போதும் தன்னுடைய உள்ளுணர்வுகள் மீது அதிக தன்னம்பிக்கை வைப்பார். தோனி எப்போதும் அதிகமாக திட்டமிடுதலை நம்ப மாட்டார்”

இதையும் படிங்க: அவங்கள தான் ரசிகர்கள் கொண்டாடுறாங்க.. பவுலர்கள் இல்லனா ஒன்னுமில்ல.. அந்த விதிமுறையை தூக்கனும்.. பும்ரா பேட்டி

“விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர். அவர் எப்போதும் தனது இதயத்தை ஜெர்ஸியில் வைத்து விளையாடுவார். அவர் எங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது ஒரு பதவி மட்டுமே. ஏனெனில் ஒரு அணியை 11 பேர் தான் நடத்துகின்றனர்” என்று கூறினார்.

- Advertisement -