எனக்கு வேற வழி தெரியல மன்னிச்சிடுங்க. பாண்டியாவிற்கும் குஜராத் அணிக்கும் நன்றி சொன்ன – ஜேசன் ராய் உருக்கம்

Roy
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாத துவக்கத்தில் வீரர்களுக்கான மெகா ஏலமும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் போட்டி போட்டு தேர்வு செய்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை உறுதி செய்துள்ள வேளையில் ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா தலைமை வகிக்கும் குஜராத் அணியில் இருந்து தற்போது முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான ஜேசன் ராய் இம்முறை குஜராத் அணிக்காக விளையாட 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள அவர் ஒரு மிகச் சிறந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது அதிரடியை ஆரம்ப போட்டிகளில் இருந்து வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அவரே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : அனைவருக்கும் வணக்கம். மிக கனத்த இதயத்துடன் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். என்னை நம்பிய அணி நிர்வாகத்திற்கும், அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த மூன்று வருடமாக நமது உலகத்தில் நடந்த விஷயங்கள் எனக்கு இந்த முடிவை எடுக்கக் காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்த தருணத்தில் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது சரியானது என தோன்றுகிறது. இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட இருக்கும் ஒவ்வொரு போட்டியையும் பார்க்க ஆவலாக உள்ளேன். இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்வதற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். எனது முடிவை அனைவரும் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி என ஜேசன் ராய் உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : 10.75 கோடி குடுத்து வாங்குனது தப்பே இல்ல. சன் ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த அற்புதம் – அசத்திட்டீங்க போங்க

இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக ஜேசன் ராய் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இப்படி விலகி இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement