10.75 கோடி குடுத்து வாங்குனது தப்பே இல்ல. சன் ரைசர்ஸ் அணிக்கு கிடைத்த அற்புதம் – அசத்திட்டீங்க போங்க

SRH
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 14 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள வேளையில் அடுத்ததாக இந்தியாவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணைந்துள்ளதால் இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமும் பிப்ரவரி மாதம் பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த 15 ஆவது சீசனில் பங்கேற்க்கும் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தங்களது அணியில் உள்ள வீரர்களை தயார்படுத்தி உள்ள வேளையில் அனைவரும் இன்னும் ஓரிரு வாரங்களில் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணி பல முக்கிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியது.

- Advertisement -

அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியான பேட்டிங் தேவை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனான அதிரடி ஆட்டக்காரர் நிக்கலஸ் பூரனை அதிகபட்ச விலை 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியிருந்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு 11 போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் வெறும் 88 ரன்களை மட்டுமே குவித்ததால் அவரின் இந்த தேர்விற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அந்த விமர்சனங்களை எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிக்கலஸ் பூரன் பதிலடி கொடுத்து தனது சிறப்பான இன்னிங்சை விளையாடி உள்ளார்.

- Advertisement -

அதன்படி தற்போது டிரினிடாட் நாட்டில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அவர் 37 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி 10 சிக்சர்கள் என அதிரடியான சதம் விளாசி அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்திருந்த அவர் தற்போது அதிரடியான சதம் விளாசி உள்ளது சன் ரைசர்ஸ் அணிக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் இந்த ஒரு தப்பை மட்டும் செய்யவே கூடாது – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்

மேலும் எப்போதுமே சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் அதிரடி வீரர் இல்லாததால் ரன் குவிக்க தடுமாறி வரும் அந்த அணி இம்முறை நிக்கலஸ் பூரனின் வருகையால் பலம் பெரும் என்பதனால் அவர்கள் மிக மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement