வீடியோ : பாபர் அசாம் அணியை புரட்டி எடுத்த ஜேசன் ராய் மாஸ் சாதனை – பிஎஸ்எல் தொடரில் நிகழ்த்தப்பட்ட புதிய உலக சாதனை

Jason Roy
- Advertisement -

பாகிஸ்தானின் பிரபலமான பிஎஸ்எல் டி20 தொடரின் 2023 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மார்ச் 8ஆம் தேதியன்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் பெசாவர் ஜால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மோதின. ராவில்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து பவர் பிளே அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்த இளம் வீரர் சாய்ம் ஆயுப் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 162 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்து அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் அரை சதம் கடந்து அசத்தலாக பேட்டிங் செய்த பாபர் அசாம் நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் விரைவாகவும் ரன்களை சேர்த்து பிஎஸ்எல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தையும் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 8வது சதத்தையும் அடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 15 பவுண்டரி 3 சித்தருடன் 115 (65) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். இருப்பினும் அவருடன் மறுபுறும் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்க விட்ட ரோவ்மன் போவல் 35* (18) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் பெஷாவர் 240/2 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

ஜேசன் ராய் வெறித்தனம்:
அதை தொடர்ந்து 241 என்ற கடினமான இலக்கை துரத்திய குயிட்டா அணிக்கு 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட மார்டின் கப்டில் அதிரடியாக 21 (8) ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த வில் ஸ்மீத்துடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் தமக்கே உரித்தான பாணியில் ஆரம்பம் முதலே அதிரடி சரவெடியான பவுண்டர்களை பறக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்தார். பொதுவாகவே அதிரடியாக விளையாடக் கூடிய அவர் இந்த போட்டியில் சுமாராக பந்து வீசிய பெஷாவர் ஒரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக அடித்து 22 பந்துகளில் அரை சதமும் 44 பந்துகளில் சதமும் அடித்தார்.

அவருடன் பெயருக்காக இரண்டாவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் ஸ்மீத் 26 (22) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சதமடித்தும் திருப்தியடையாமல் ஓயாமல் அடித்து நொறுக்கிய ஜேசன் ராய் 20 பவுண்டரி 5 சிக்ஸருடன் 145* (63) ரன்கள் விளாசி மாஸ் பினிஷிங் கொடுத்தார். கூடவே முகமது ஹபீஸ் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (18) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 243/2 ரன்கள் எடுத்த குயிட்டா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. அதனால் முதல் இன்னிங்ஸில் சதமடித்த பாபர் அசாம் போராட்டம் வீணானது.

- Advertisement -

அந்தளவுக்கு 230.16 என்ற அனல் பறக்கும் ஸ்ட்ரைக் ரைட்டில் பேட்டிங் செய்து 145 ரன்கள் குறித்து ஜெசன் ராய் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜேசன் ராய் : 145* (63), பெசாவருக்கு எதிராக, 2023*
2. கோலின் இக்ராம் : 127* (59), குயிட்டாவுக்கு எதிராக, 2018
3. கேமரூன் டெல்போர்ட் : 117* (60), லாகூருக்கு எதிராக, 2019

மேலும் பிஎஸ்எல் தொடரில் வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை துரத்திய அணி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் விளையாடிய குயிட்டா அணி படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் : 243/2, பெஷாவர் அணிக்கு எதிராக, 2023*
2. முல்தான் சுல்தான்ஸ் : 209/5, லாகூர் அணிக்கு எதிராக, 2022

இதையும் படிங்க:வீடியோ : இதுக்கு கூட சரிப்பட்டு வரலைனா எப்படி, கேஎஸ் பரத்தை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

அத்துடன் ஐபிஎல், பிஎஸ்எல், பிக்பேஷ், பிபிஎல் என பிரீமியர் லீக் டி20 தொடர்களில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையும் குயிட்டா அணி படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் : 243/2, பெஷாவர் அணிக்கு எதிராக, 2023* (பிஎஸ்எல்)
2. செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பட்ரியோட்ஸ் : 242/6, ஜமைக்காவுக்கு எதிராக, 2019 (கரீபியன் பிரீமியர் லீக்)
3. அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் : 230/3, ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிராக, 2023 (பிக்பேஷ்)

Advertisement