மறுபடியும் சி.எஸ்.கே அணியில் விளையாட ஆசையா இருக்கு.. வெளிப்படையாக கூறிய – வெஸ்ட் இண்டீஸ் வீரர்

CSK-Auction
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் நடப்பு சாம்பியனாக 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றி நடைபோட்ட ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி அவர்கள் அந்த வெற்றியை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்ததாக 2024-ஆம் ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் தொடர் தற்போதே அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் அந்த தொடருக்கு முன்பாக மினி ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக அடுத்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் சில வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்திருந்தனர். இந்நிலையில் நடப்பு சாம்பியனாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் சென்னை அணியானது இந்த ஏலத்திற்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை அணி 31 கோடி ரூபாய் கையிறுப்புடன் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை வாங்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள வேளையில் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆசை என்று வெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகளுடன் சில சீசன்களில் விளையாடியுள்ளேன். எனவே அந்த அணிகளில் ஏதாவது ஒரு அணி என்னை ஏலத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க : உள்ளே புகுந்த மழை.. இங்கிலாந்தை அடக்கி மாஸ் கம்பேக் கொடுத்த வெ.இ.. 25 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

ஆனால் ஏலம் என்பது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மினி இடத்தில் ராஜஸ்தான் அணியில் சார்பாக 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஹோல்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த ஏலத்தின் போதே சென்னை அணி அவரை அணியில் எடுக்க 5 கோடியே 50 லட்சம் வரை ஏலம் கேட்டு முனைப்பு காட்டியதால் இந்த மினி ஏலத்திலும் அவரை கட்டாயம் வாங்குவதற்கு முயற்சிக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement