உள்ளே புகுந்த மழை.. இங்கிலாந்தை அடக்கி மாஸ் கம்பேக் கொடுத்த வெ.இ.. 25 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

Wi vs eng
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு 2வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த இங்கிலாந்து தொடரை சமன் செய்தது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசிப் போட்டி டிசம்பர் 9ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் மழையால் தாமதமாக துவங்கியதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 4, வில் ஜேக்ஸ் 17, ஜாக் கிராவ்லி 0 ஆகிய டாப் 3 பேட்ஸ்மேன்கள் மேத்யூ போர்ட்ஜ் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
போதாக்குறைக்கு அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 1, கேப்டன் ஜோஸ் பட்லர் 0 ரன்களில் அவுட்டானதால் 49/5 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இங்கிலாந்து 200 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய பென் டூக்கெட் 71 (73) ரன்களும் லிவிங்ஸ்டன் 45 (56) ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் கஸ் அட்கின்ஷன் 20*, மேத்தியூ போட்ஸ் 15, ரெஹன் அஹ்மத் 15 ரன்கள் எடுத்ததால் 40 ஓவர்களில் இங்கிலாந்து 206/9 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மேத்யூ போர்ட்ஜ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் துவங்கிய போது மீண்டும் மழை வந்து போட்டியை தாமதப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 34 ஓவரில் 188 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரன்டன் கிங் 1, ஷாய் ஹோப் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் துவக்க வீரர் அலிக் அதனேஸி 45, கேசி கார்ட்டி 50 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

இறுதியில் ஹெட்மயர் 3, ரூதர்போர்ட் 3 ரன்களில் அவுட்டானாலும் ரோமாரியா செப்பார்ட் அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் 41* (28) ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 31.4 ஓவரிலேயே 191/6 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: டீம்லயே செலக்ட் ஆகல.. ஆனாலும் தென்னாப்பிரிக்கா சென்றடைந்த சர்பராஸ் கான் – காரணம் என்ன தெரியுமா?

இந்த வெற்றியால் 1975, 1979 சாம்பியானான வெஸ்ட் இண்டீஸ் 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சோகத்திலிருந்து மீண்டு வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து கம்பேக் கொடுத்துள்ளது. அத்துடன் 1998க்குப்பின் 25 வருடங்கள் வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் 2023 உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி படுதோல்வியை சந்தித்து வெளியே இங்கிலாந்து தற்சமயத்தில் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸை கூட வீழ்த்த முடியாமல் மீண்டும் மண்ணை கவ்வியுள்ளது.

Advertisement