டீம்லயே செலக்ட் ஆகல.. ஆனாலும் தென்னாப்பிரிக்கா சென்றடைந்த சர்பராஸ் கான் – காரணம் என்ன தெரியுமா?

Sarfaraz-Khan
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

அந்த வகையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணியானது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான முதன்மை இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா சென்றடைந்துள்ள வேளையில் முதன்மை வீரர்களுடன் இணைந்து அணியில் இடம்பெறாத சர்ஃபாஸ் கானும் தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்துள்ளது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனாலும் தற்போது சர்பராஸ் கான் எதற்காக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய ஏ அணி சார்பாகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

- Advertisement -

இந்திய ஏ அணியின் முதன்மை வீரராக பார்க்கப்படும் சர்பராஸ் கான் அந்த தொடரில் விளையாட இருப்பதனாலே அங்கு சென்று அடைந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பல பேச்சுகள் இருந்து வருகின்றது.

இதையும் படிங்க : அவரை என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியல.. இந்திய வீரருக்கு கிறிஸ் கெயில் பாராட்டு

இவ்வேளையில் இந்திய ஏ அணியில் அவர் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய ஏ அணியிலும் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் முதன்மை இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement