அவரை என்ன சொல்லி பாராட்டுறதுன்னே தெரியல.. இந்திய வீரருக்கு கிறிஸ் கெயில் பாராட்டு

Chris Gayle 3
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரில் பாண்டியா காயத்தால் விளையாடாத காரணத்தாலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுப்பதாலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது.

சொல்லப்போனால் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 – 1 என்ற கணக்கில் வெற்றியும் கண்டது. அதே போல தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் இத்தொடரிலும் மூத்த வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இந்த அடுத்தடுத்த தொடர்களில் டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கெயில் பாராட்டு:
2023 உலகக் கோப்பை ஃபைனல் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத அவர் டி20 கிரிக்கெட்டில் அதற்கு நேர்மாறாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற ரசிகர்களின் பாராட்டுகளையும் அவர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் வார்த்தைகளால் விவரித்து பாராட்ட முடியாத அளவுக்கு அசத்தும் சூரியகுமார் யாதவ் பிரகாசமான வருங்காலத்தை கொண்ட தரமான வீரர் என்று கிறிஸ் கெயில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு தனித்துவமானவர்”

- Advertisement -

“மைதானத்தின் அனைத்து திசைகளிலும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இப்போது தான் அவர் தன்னுடைய கேரியரை தொடங்கினார் என்று எனக்கு தெரியும். ஆனால் சூரியகுமார் யாதவ் போன்ற வீரருக்கு நிலைத்தன்மை இன்னும் முக்கியமாக இருக்கும். அவரிடம் நம்ப முடியாத அபாரமான திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவிற்கு 2 டி20 போட்டிகளில் விளையாட தடைவிதித்த ஐ.சி.சி – காரணம் என்ன?

“அவருக்கு எதிராக எப்படி துல்லியமாக பந்து வீசுவது என்ற பயிற்சிகளை பவுலர்கள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் கிட்டத்தட்ட 360 டிகிரியிலும் விளையாடக்கூடிய வீரராக இருக்கிறார். அதனால் அவருக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவது பவுலர்களுக்கு கடினமான வேலையாக இருக்கும். ஏற்கனவே சொன்னது போல் அவர் தனித்துவமான திறமை கொண்டவர்” என்று கூறினார்.

Advertisement