ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவிற்கு 2 டி20 போட்டிகளில் விளையாட தடைவிதித்த ஐ.சி.சி – காரணம் என்ன?

Sikandar-Raza
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்த முதல் டி20 போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது நடைபெற்ற ஒரு பரபரப்பு சம்பவத்தின் காரணமாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசாவிற்கு தற்போது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த முதலாவது டி20 போட்டியில் சிக்கந்தர் ராசா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அயர்லாந்து வீரர்களான கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜாஷ் லிட்டில் ஆகிய இருவருடன் களத்திலேயே வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.

- Advertisement -

பின்னர் வார்த்தை மோதல் ஒரு கட்டத்தில் முற்றியபோது அம்பயர்கள் தடுத்தும் அயர்லாந்து வீரரான கர்டிஸ் கேம்பரை தனது பேட்டால் தாக்க முயற்சி செய்தார். இப்படி களத்தில் ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதால் அவர் மீது களத்தில் இருந்த நடுவர்கள் ஐசிசி-யிடம் புகார் அளித்திருந்தனர்.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ அதிகம்.. தெ.ஆ சீரிஸ் முடிஞ்சதும் அவரோட பதவி காலம் பற்றி முடிவு பண்ணிருவோம்.. ஜெய் ஷா அறிவிப்பு

அதனை ஆராய்ந்த ஐசிசி-யும் சிக்கந்தர் ராசாவிற்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்ததோடு சேர்த்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடையும் விதித்தது. அதேபோன்று அயர்லாந்து வீரர்கள் கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜாஷ் லிட்டில் இருவருக்குமே போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement