- Advertisement -
ஐ.பி.எல்

கடைசி நேரத்துல இப்படி நடந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு.. வேதனையை வெளிப்படுத்திய – ஜேமி ஓவர்டன்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் பாதியில் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. மொத்தம் இதுவரை தங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது. அதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பும் உயிர்ப்புடன் உள்ளது.

சி.எஸ்.கே அணியிலிருந்து விலகியது குறித்து : ஜேமி ஓவர்டன் உருக்கம்

இனிவரும் மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால் தற்போதுள்ள சிஎஸ்கே அணியில் பலவீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து விலகி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அந்த வகையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனும் காயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அணியிலிருந்து விலகியிருந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அற்புதமான செயல்பாட்டை அவர் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி வெளிப்படுத்திய வேளையில் அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறியது சென்னை அணிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறுவதற்கு பின்னர் தற்போது சென்னை அணிக்காக தான் விளையாடியது குறித்தும் தற்போது காயம் காரணமாக வெளியேறி இருப்பது குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : சென்னை அணி இப்படி பிளே ஆப் சுற்றினை நெருங்கும் போது இறுதி கட்டத்தில் காயம் காரணமாக விலகியது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த ஆண்டு நான் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து விளையாடியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் சென்னை அணி வீரர்கள் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து திடீரென வெளியேறிய ரச்சின் ரவீந்திரா – என்ன காரணம்?

சென்னை அணியில் எனக்கு கிடைத்த ஆதரவும், அன்பும் மிகச் சிறப்பாக இருந்தது. சென்னை அணியின் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணர்வு நிச்சயம் அற்புதமாகவே இருந்தது. உங்களது அன்பை நான் மனதார பாராட்டுகிறேன் என நெகிழ்ச்சியுடன் ஜேமி ஓவர்டன் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -