கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதன்பின்னர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி விடுவித்த பிறகு புதிய கேப்டனாக கடந்த ஆண்டு அஜின்க்யா ரஹானே பதவியேற்றார். அவரது தலைமையின் கே.கே.ஆர் அணி கடந்த சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
கே.கே.ஆர் அணியிலிருந்து வெளியேறிய ரச்சின் ரவீந்திரா :
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் அஜின்க்யா ரஹானே தலைமையில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 6 தோல்வி என 9 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் பரிதாபமான நிலையில் உள்ளது.
இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட அந்த அணி இந்த தொடரில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியை சேர்ந்த இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திரா அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதுகுறித்த அதிகாப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த தொடரில் கொல்கத்தா அணி மோசமாக விளையாடி வரும் வேளையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளது. இப்படி இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ரச்சின் ரவீந்திரா இறுதி கட்டத்தில் விலக காரணம் யாதெனில் : நியூசிலாந்து அணியானது அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பையை வென்ற இஷான் கிஷனுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்த – பீகார் மாநில அரசு
இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் ரச்சின் ரவீந்திரா அந்த தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதினால் கே.கே.ஆர் அணியிலிருந்து விலகி நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



