அப்படி சொன்னதால ரிட்டையராக சொன்னாரு.. சுப்மன் கில்லுடன் ஏற்பட்ட ஸ்லெட்ஜிங் பற்றி பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்து 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பை வென்று 12 வருங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

அப்படி கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெற்ற அந்தத் தொடரில் இரு அணிகளுக்கு இடையே ஏராளமான நிகழ்வுகளும் மோதல்களும் இருந்தன. அதில் ராஞ்சியில் நடந்த கடைசி போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் – இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது.

- Advertisement -

ஓய்வு பெறச் சொன்னாரு:
அதாவது அந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடிய சுப்மன் கில் ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக இறங்கி சென்று அதிரடியான சிக்சரை பறக்க விட்டார். அதனால் கடுப்பான ஜேம்ஸ் ஆண்டர்சன் சில வார்த்தைகளை சொன்னார். அதற்கு சுப்மன் கில்லும் பதிலடி கொடுத்தார். இறுதியில் அந்த நேரத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது அது எங்களுக்குள்ளேயே இருப்பது நல்லது என சுப்மன் கில் பின்னணியை தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் சொந்த மண்ணில் இப்படி அடிக்கும் நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எத்தனை ரன்கள் அடித்திருக்கிறீர்கள்? என்று தம்மை சிக்ஸர் அடித்த சுப்மன் கில்லிடம் கேட்டதாக செய்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதற்கு சீக்கிரமாக “நீங்கள் ஓய்வு பெற்று விடுங்கள்” என்று சுப்மன் கில் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரிடம் இந்தியாவுக்கு வெளியே நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்துள்ளீர்கள்? என்ற வகையில் கேட்டேன். அதற்கு இது நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் என்று கில் என்னிடம் சொன்னார். ஆனால் அடுத்த 2 பந்துகள் கழித்து அவரை நான் அவுட்டாக்கினேன்” என்று கூறினார். முன்னதாக அதே போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஓய்வு பெறுமாறு சொன்னதற்காக 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த ஜானி பேர்ஸ்டோ நேராக ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த சுப்மன் கில்லிடம் சென்று வம்பிழுத்தார்.

இதையும் படிங்க: ரகானே தடுமாற இது தான் காரணம்.. இன்ஸ்டாகிராமில் தவறை சுட்டிக்காட்டிய சைன்டிஸ்ட் அஸ்வின்?

அதற்கு “நீங்கள் இந்தத் தொடரில் எத்தனை சதங்கள் அடித்துள்ளீர்கள்” என்று சொல்லி அவருக்கு சுப்மன் கில் பதிலடி கொடுத்தார். அந்த வகையில் நிறைவு பெற்ற இந்தத் தொடரில் வெற்றி கண்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து 9வது இடத்திற்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement