நான் ஐ.பி.எல் தொடரில் என் பெயரை பதிவு செய்ததற்கு காரணம் இதுதான் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி

Anderson
- Advertisement -

இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே 10 அணிகளாலும் வாங்கப்படுவார்கள் என்பதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன் :

இந்த ஐபிஎல் ஏலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் சிலரும் தங்களது பெயர்களை பதிவு செய்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் 42 வயதான இங்கிலாந்து சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்திற்கான தனது பெயரை பதிவு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வந்த அவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் தனது பெயரை முதல்முறையாக பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவரை யாராவது ஏலத்தில் எடுப்பார்களா? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் தனது பெயரை பதிவு செய்ய என்ன காரணம்? என்பது குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் ஐபிஎல் மெகா ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்தேன்.

- Advertisement -

நான் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படுவேனா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் நான் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணிக்காக நிச்சயம் என்னால் முடிந்தவரை போராடுவேன். தற்போதும் நான் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளேன். என்னை பொறுத்தவரை ஒரு வீரர் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் விளையாடலாம் என்று கேட்டால் :

இதையும் படிங்க : ஆர்சிபி’யை அடிச்சப்பவே தெரியும்.. சஞ்சு சாம்சனின் இந்த அதிரடிக்கு கம்பீர் காரணமில்லை.. ஏபிடி பாராட்டு

50 வயது வரை தொடர்ச்சியாக விளையாட முடியும் என்று கூறுவேன். அந்த அளவிற்கு நான் தற்போதும் என்னுடைய உடற்தகுதியில் மிகவும் பிட்டாக இருக்கிறேன். அதனாலேயே நான் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement