ஆர்சிபி’யை அடிச்சப்பவே தெரியும்.. சஞ்சு சாம்சனின் இந்த அதிரடிக்கு கம்பீர் காரணமில்லை.. ஏபிடி பாராட்டு

Ab de villiers
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பன் நகரில் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 107 (50) ரன்கள் விளாசினார். அதனால் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடைசியாக நடைபெற்ற வங்கதேச டி20 போட்டியிலும் சதமடித்திருந்த அவர் இந்தியாவுக்காக அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வீரராகவும் சாதனை படைத்தார். 2015 முதல் நிலையான வாய்ப்புகளை பெறாமல் தடுமாறிய சஞ்சு சாம்சன் சமீப காலங்களில் கிடைத்த வாய்ப்புகளிலும் அசத்தாததால் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அந்த பின் அவருக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

கம்பீர் காரணமில்ல:

இந்நிலையில் சாம்சன் சிறப்பாக செயல்படுவது பெருமையளிப்பதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவருடைய இந்த ஆட்டத்திற்கு கௌதம் கம்பீர் போன்ற புதிய பயிற்சியாளர் குழு காரணமாக இருக்காது என்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்சன் பெரிய சதம் அடித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளது அற்புதமானது”

“அவரால் நானும் பெருமையுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அவருடன் நானும் பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துள்ளேன். நான் எப்போதும் சாம்சனின் ரசிகன். அவர் சிறப்பாக விளையாடுவதை நானும் விரும்புகிறேன். ஒருமுறை ஆர்சிபி அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் அவர் 100 ரன்கள் அடித்த போது நானும் அங்கே இருந்தேன். அப்போதே இவர் ஸ்பெஷலானவர் என்று நான் நினைத்ததை இன்று சாம்சன் நிரூபித்துள்ளார்”

- Advertisement -

ஏபிடி பாராட்டு:

“அவர் பெரும்பாலும் 140 – 160 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடுவார். ஆனால் இப்படி 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி பார்த்ததில்லை. அதிலும் கடந்த சதம் மிகவும் வேகமானது. அவருடைய இந்த ஆட்டத்தை ஏதோ ஒரு விஷயம் கிளிக் செய்துள்ளது. அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவருடைய ஆட்டத்தில் புதுமை, வேடிக்கையான ஷாட், ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் போன்றவை இல்லை”

இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: 118 ரன்ஸ்.. ஜெகதீசன் சதம்.. அசாம் அணிக்கு எதிராக 1 புள்ளி மட்டுமே பெற்ற தமிழ்நாடு

“அவர் அடிப்படைகளை பின்பற்றி விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருக்கிறது. அவர் 3 பார்மெட்டிலும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதைத் தேர்வாளர்களும் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏதோ ஒன்று அவரை கிளிக் செய்துள்ளது. கம்பீர், லக்ஷ்மன் ஆகியோருக்கு மரியாதை குறைவாக எதுவுமில்லை. ஆனால் இந்தப் பையன் சிறப்பாக உணர்ந்து விளையாட வேண்டும் என்ற முதிர்ச்சியை தாமாக பெற்றுள்ளதாக கருதுகிறேன். அவரிடம் அடுத்ததாக உள்ள 6வது கியர் ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன்”என்று கூறினார்.

Advertisement