ரஞ்சி கோப்பை: 118 ரன்ஸ்.. ஜெகதீசன் சதம்.. அசாம் அணிக்கு எதிராக 1 புள்ளி மட்டுமே பெற்ற தமிழ்நாடு

TN vs Assam
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி தங்களுடைய முதல் போட்டியில் சௌராஷ்டிராவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இருப்பினும் டெல்லி மற்றும் சட்டீஸ்கர் அணிக்கு எதிரான அடுத்த 2 போட்டிகள் டிராவில் முடிந்தன. அந்த நிலையில் தமிழ்நாடு தங்களுடைய 4வது போட்டியில் அசாம் அணியை எதிர்கொண்டது.

கௌகாத்தி நகரில் நவம்பர் 6ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் போராடி 338 ரன்கள் எடுத்து அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 94, விஜய் சங்கர் 76, முகமத் அலி 49* ரன்கள் எடுத்தனர். அசாம் அணிக்கு முத்தர் ஹுசைன், தர்ஷன், மிரின்மோய் துட்டா, ராகுல் சிங், புர்காயஸ்தா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

அசாம் அசத்தல்:

பின்னர் விளையாடிய அசாம் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் டேனேஷ் தாஸ் சதமடித்து 109, புர்காயஸ்தா 90 ரன்கள் அடித்தனர். தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக பிரதோஷ்பால் 3, முகமது அலி 2, பிரணவ் ராகவேந்திரா 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அதன் பின் 107 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய தமிழ்நாடு அணிக்கு சுரேஷ் லோகேஸ்வர் 3, விஜய் சங்கர் 23 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் நாராயன் ஜெகதீசன் நங்கூரமாக விளையாடி சதமடித்து 118* ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய பிரதோஷ் பால் அரை சதம் அடித்து 68* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தமிழ்நாடு அணியின் நிலை:

அப்போது 4 நாட்கள் ஆட்டம் நிறைவுக்கு வந்ததால் இப்போட்டி ட்ராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பிசிசிஐ விதிமுறைப்படி இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் அசாம் முன்னிலை பெற்றது. அதன் காரணமாக அசாம் அணி மூன்று புள்ளிகளை பெற்றது. மறுபுறம் தமிழ்நாடு அணி 1 புள்ளி மட்டுமே பெற்றது.

இதையும் படிங்க: 10 – 15 வருடத்துக்கு முன் வலுவான இந்தியா.. இப்போ ஸ்பின்னர்களிடம் அடி பணிய இதான் காரணம்.. பாண்டிங்

இந்தப் போட்டியின் முடிவில் எலைட் குரூப் டி பிரிவில் தமிழ்நாடு மொத்தம் 4 போட்டிகளில் 1 வெற்றியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் தமிழ்நாடு அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் 2 இடங்களில் சண்டிகர் மற்றும் ரயில்வேஸ் அணிகள் உள்ளன. இதை அடுத்து தமிழ்நாட்டு தங்களுடைய அடுத்தப் போட்டியில் நவம்பர் 13 ஆம் தேதி ரயில்வேஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement