10 – 15 வருடத்துக்கு முன் வலுவான இந்தியா.. இப்போ ஸ்பின்னர்களிடம் அடி பணிய இதான் காரணம்.. பாண்டிங்

ricky ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. அத்துடன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் முழுமையான ஒயிட் வாஷ் தோல்வியையும் இந்தியா பதிவு செய்தது. அது போக சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு தொடரில் தோல்வியையும் பதிவு செய்தது.

அந்த தோல்விகளால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் தோல்வியை சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஸ்பின்னர்களிடம் தடுமாற்றம்:

அது போக சமீபத்தில் இலங்கை மண்ணில் 27 வருடங்கள் கழித்து இந்தியா முதல் முறையாக ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதற்கும் இலங்கைத் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. இத்தனைக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் என்றாலே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பது வெளிநாட்டு அணிகளின் சிந்தனையாகும்.

ஆனால் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதற்கான காரணம் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அது நல்ல தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிரான இந்தியாவின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

பாண்டிங் கருத்து:

“நவீன இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதையும் அது காட்டுகிறது. ஒருவேளை தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் அதிகமாக சாதகமான பிட்ச்களில் இந்திய அணியினர் விளையாடுவது காரணமாக இருக்கலாம். அதன் பயனாக தற்போது இந்திய அணி நிறைய தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது”

“அதனால் அவர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக முன்பு போல் அதிகம் விளையாடாமல் இருக்கலாம். ஒருவேளை அது ஐபிஎல் தொடரால் இருக்கலாம். அல்லது ஐபிஎல் தொடரில் அதிகமாக விளையாடும் இளம் இந்திய வீரர்கள் கடந்த 15 – 20 முன்பு போல ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொள்ளாததால் இருக்கலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் இந்தியாவில் ஐபிஎல் தொடர்காக நிறைய பிட்ச்கள் ஃபிளாட்டாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 5 வருடத்தில் 2 தானா.. விராட் கோலி அதுக்கு தகுதியில்லாம மாறிட்டாரு.. ஆஸியில் நிரூபிச்சு காட்டுங்க.. பாண்டிங் அட்வைஸ்

அதில் விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகத்தை நன்றாக சமாளிக்கிறார்கள். அதனாலேயே நியூஸிலாந்திடம் 46க்கு ஆல் அவுட்டான அதே போட்டியில் 462 ரன்கள் குவித்து இந்தியா போராடியது. ஆனால் எப்போதாவது சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடும் போது ஸ்பின்னர்களை சுமாராக எதிர்கொள்வதால் இந்தியா தோல்வியை சந்திக்கிறது.

Advertisement