டெஸ்ட் கிரிக்கெட்டில் இனியாரும் தொட முடியாத புதிய வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் – குவியும் வாழ்த்துக்கள்

James-Anderson
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 124 டெஸ்ட் போட்டிகள், 194 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். தான் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஆண்டர்சன் 174 போட்டிகளில் விளையாடி 658 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 40 வயதான அவர் இன்றளவும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக எவ்வித குறைவின்றி அசத்தலாக பந்துவீசி வருகிறார்.

James Anderson

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இப்படி 19 ஆண்டுகாலம் விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் காயத்தை எதிர்கொள்வதால் இவ்வளவு காலம் விளையாடுவது என்பது அரிதான ஒன்று.

அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் முரளிதரன் (800 விக்கெட்), ஷேன் வார்னே (708 விக்கெட்) ஆகிய இருவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (658 விக்கெட்களுடன்) மூன்றாவது இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தகரராகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.

Anderson-3

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் பங்கேற்று விளையாடி வருவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி யாரும் தொட முடியாத ஒரு சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அவருக்கு 174-வது டெஸ்ட் போட்டியாக இருக்கும் வேளையில் இங்கிலாந்து மண்ணில் அவர் விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது. இதனால் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : அவரைப்போல் யாரும் என்னை நம்பல, அவருடன் விளையாடியதே வாழ்வின் சிறந்த தருணம் – விராட் கோலி உருக்கம்

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் இனி வரும் எவராலும் நிச்சயம் 100 டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடவே முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement