41 வருடம் 187 நாள் விசாகப்பட்டினம் போட்டியின் மூலம் அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ள – ஜேம்ஸ் ஆண்டர்சன்

James-Anderson
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவதாக ஸ்டோக்ஸ் அறிவித்தார். இப்படி ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதான ஒரு சாதனையையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அந்த வகையில் இந்திய மண்ணில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரராக ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது 41 வயது 187 நாட்கள் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 183 போட்டிகளில் விளையாடி 690 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த 21 ஆண்டுகளாக அந்த அணிக்காக இன்றளவும் முழுஉடற்தகுதியுடன் அவர் விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இனிமேலும் அவங்க ஜெய்க்கலைன்னா தான் ஆச்சர்யம்.. டெஸ்ட் தொடரின் வெற்றியாளர் பற்றி மைக்கேல் ஆதர்டன்

பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது தற்போதைய முதல் செஷன் வரை 19 ஓவர்கள் விளையாடி 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் குவித்துள்ளார். முதல் விக்கெட்டாக ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement