இனிமேலும் அவங்க ஜெய்க்கலைன்னா தான் ஆச்சர்யம்.. டெஸ்ட் தொடரின் வெற்றியாளர் பற்றி மைக்கேல் ஆதர்டன்

Micheal Atherton
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை கொண்டிருந்தது.

அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பி வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் வெற்றியை தாரை பார்த்தது. மறுபுறம் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய எழுச்சி கண்டு மகத்தான வெற்றி பெற்ற இங்கிலாந்து வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்பதை முதல் போட்டியிலேயே செய்து காட்டியது.

- Advertisement -

ஜெயிக்கலைன்னா ஆச்சர்யம்:
இருப்பினும் சொந்த மண்ணில் இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்து தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஒருவேளை அடுத்த போட்டிகளிலும் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்து இந்தியா தொடரை இழந்தால் அது மிகப்பெரிய ஆச்சர்யம் என்றே சொல்லலாம். இந்நிலையில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து இந்த தொடரை வெல்லாமல் போனால் அது தான் ஆச்சர்யம் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.

இது பற்றி டைம்ஸ் பத்திரிகையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்து தற்போது இத்தொடரை வெல்வதற்கான 2வது தகுதி வாய்ந்த அணியாக நகர்ந்துள்ளது. ஒருவேளை இந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் இத்தொடரை வெல்லாமல் போனால் அது தான் ஆச்சரியமான ஏமாற்றமாக இருக்கும். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடியதை வைத்து அப்படி ஒரு முடிவு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை”

- Advertisement -

“அது மனதளவில் இரு அணிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். எனவே அது இத்தொடரின் முன்னிலையை அதிகப்படுத்த இங்கிலாந்துக்கு அற்புதமான வாய்ப்பை கொடுத்துள்ளது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இத்தொடரின் 2வது போட்டி துவங்கியுள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா செய்துள்ள 3 மாற்றங்கள் – விவரம் இதோ

அதில் ராகுல், ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடும் இந்தியா எப்படியாவது இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அந்த போட்டியில் ரஜத் படிடார் அறிமுகமாக களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement